சேது: வேதாரண்யத்தில் முற்றுகைப் போராட்டம்- மீனவர்கள் கைது
வேதாரண்யம்:
சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்தக் கோரி கடலை ஆழப்படுத்தும் கப்பலை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தப்போவதாக மீனவர்கள் அறிவித்ததை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்பட்டு நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் கடலில் தூர் வாரும் பணிகள்முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந் நிலையில் தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்களை இன்று முற்றுகையிட்டுப்போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் அறிவித்திருந்தனர்.
வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத் துறை மீனவர் கிராமத்திலிருந்து 25 எந்திரப் படகுகள் மற்றும் 220க்கும் மேற்பட்டபைபர் படகுகள் மூலம் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாகஅறிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து வேதாரண்யம், ஆறுகாட்டுத் துறை, ஈச்சங்குப்பம் உட்பட மீனவ கிராமங்களில் பதற்றமான சூழ்நிலைஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இப்பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
ஆறுகாட்டுத் துறையில் திருச்சி மண்டல ஐஜி தமிழ்ச்செல்வன், நாகை மாவட்ட எஸ்.பி. அப்துல் ரகூப் ஆகியோர் தலைமையில்ஆயுதப்படை போலீஸார் மற்றும் உள்ளூர், வெளியூர் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இந் நிலையில் இன்று காலை முற்றுகைப் போராட்டத்திற்காக ஆறுகாட்டுத் துறையில் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள்குவிந்தனர். அவர்கள் கடலுக்குள் செல்ல முயன்ற போது போலீஸார் அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
மேலும் இங்கு மீனவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஆறுகாட்டுத் துறை பகுதியில் பதற்றமான சூழ்நிலைநிலவுகிறது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |