For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரமாண்டமான வேலூர் திமுக மாநாடு தொடங்கியது

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:


வேலூரில் திமுகவின் மண்டல மாநாடு இன்று காலை தொடங்கியது.

இதையொட்டி ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதிலும் இருந்தும் வேலூரில் குவிந்துள்ளனர்.

மாநாட்டுப் பந்தலை நேற்றிரவு பார்வையிட்ட திமுக தலைவர் கருணாநிதி சில மாற்றங்களைச் சொன்னார். அவை அனைத்தும்இரவோடு இரவாக மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து இன்று காலை சற்குண பாண்டியன் கொடியேற்றி வைக்க மாநாடுதொடங்கியது.

வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டகளை உள்ளடக்க இந்த மண்ட மாநாடு இன்றும் நாளையும்நடக்கிறது.

பெருமுகை வசூர் பகுதியில் பல ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டு இந்த மாநாட்டுக்கான பிரமாண்ட பந்தலும் தாற்காலிககுடிகளும் தண்ணீர் தொட்டிகளும் உணவுக் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டையொட்டி வேலூர் முழுவதும் திமுக கொடிகளும் தோரணங்களும் வரவேற்பு வளைவுகளும் கட்-அவுட்டுகளுமாககாட்சியளிக்கிறது.

இனஅறு காலை அரித்துவார மங்கலம் பழனிவேல் குழுவினரின் நாதஸ்வரம், நாகூர் அனிபாவின் இசை நிகழ்ச்சியோடுமாநாடு தொடங்கியது. மாநாட்டை பொன்முடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாவட்டத் தலைவர்கள் உரையாற்றிவருகின்றனர்.

இன்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இரவில் பேராசிரியர் அன்பழகன் பேசுகிறார்.

நாளை ராணிப்பேட்டை வாஜூல்லா குழுவினரின் இசை நிகழ்ச்சியோடு தொடங்கும் மாநாட்டில் கூட்டணிக் கட்சிகளின்தலைவர்களான வாசன், ராமதாஸ், வைகோ உள்ளிட்டோர் பேசுகின்றனர். இரவில் கருணாநிதி உரையாற்றுகிறார். அப்போதுமத்திய அரசுக்கு சில முக்கிய கோரிக்கைகளை கருணாநிதி வைப்பார் எனறு தெரிகிறது.

மாநாட்டையொட்டி ஆயிரக்கணக்கான வாகனங்களில் திமுக தொண்டர்கள் வேலூரில் குவிந்துள்ளனர். ஆனால், போலீசாரின்பாதுகாப்பு குறைவாகவே உள்ளது. இதனால் தொண்டர் அணியினரும் இளைஞர் அணியினருமே பாதுகாப்புப் பணிகளிலும்,போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக தொண்டர்களையும் கூட்டணிக் கட்சியினரையும் தயார் செய்யும் வகையில் இந்த மாநாடுஅமையும் என்று தெரிகிறது.

இந்த மாநாடு ஒரு திருப்பு முனையாக அமையும் என திமுக தலைமைக் கழகச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். 34ஆண்டுகளுக்குப் பின் வேலூரில் இந்தக் கட்சி மாநாட்டை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1966, 1971ல் வேலூரில் மாநாடுகள் நடத்திவிட்டு தேர்தலை சந்தித்தபோதெல்லாம் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப்பிடித்துள்ளது என்பதால் இந்த மாநாட்டை மிக செண்டிமென்டாக பார்க்கின்றனர் அக் கட்சியின் தொண்டர்கள்.

வாக்காளர் பட்டியலில் லட்சக்கணக்கில் போலி வாக்காளர்களைச் சேர்த்த அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் மீது தேர்தல்கமிஷன் நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ள கருணாநிதி, அது குறித்து இந்தமாநாட்டில் அறிவிக்கப் போவதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X