For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தயாநிதி மாறனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போக்குவரத்து நெரிசலால் பெங்களூர் நகரம் அவதிப்படுவதைப் பார்த்தாவது சென்னையில் போக்குவரத்து நெரிசலைக்குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறியிருப்பதுற்கு தமிழகசட்டத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தயாநிதி மாறன் பேசுகையில், போக்குவரத்து நெரிசல், அடிப்படைக் கட்டமைப்பு குறைவுகாரணமாக பெங்களூர் நகரம் தனது தகவல் தொழில்நுட்ப நகரம் என்ற அடையாளத்தை இழந்து வருகிறது. பல நிறுவனங்கள்சென்னைக்கு இடம் பெயரத் தொடங்கியுள்ளன.

இதை உணர்ந்து, சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைமேம்படுத்தவும் தமிழகஅரசு உடனடியாக செயலில் இறங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார்கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தயாநிதி மாறனின் பேச்சு அவரது அரைவேக்காட்டுத்தனமான,ஆதாரமில்லாத புத்தியைக் காட்டுகிறது. முதல் முறையாக அமைச்சராகியுள்ள தயாநிதி மாறன், எல்லாம் தெரிந்தவர் போலசென்னை நகரின் அடிப்படை கட்டமைப்பு குறித்து உளறியுள்ளார்.

பேசுவதற்கு முன்பு எல்லா விஷயங்களையும் தெரிந்து கொண்டு பேசுமாறு யாராவது அவருக்கு அறிவுரை கூறினால் நல்லது.பெங்களூர் மாதிரி சென்னையும் ஆகி விடும் என்று அவர் கற்பனையாக கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.

முதல்வர் ஜெயலலிதாவின் அயராத உழைப்பு மற்றும் தீவிர கவனம் காரணமாக தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறைசெழித்தோங்கி வளர்ந்து வருகிறது. சென்னை நகரில் போதிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தகாரணத்தால்தான் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னைக்கு வருவதை விரும்புகின்றன, வந்து கொண்டிருக்கின்றன.

இதை புரிந்து கொள்ளாமல், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் சென்னையில் இல்லை என்பது போல தயாநிதி மாறன்பேசியிருப்பது கேலிக் கூத்தாக உள்ளது. விளம்பரம் தேடிக் கொள்வதற்காகவே தயாநிதி மாறன் இவ்வாறு பேசி வருகிறார்.

ரூ. 18,000 கோடி மதிப்பில், பத்து வருட காலத்தில் நிறைவேற்றும் வகையில், சென்னை பெருநகர மேம்பாட்டுத் திட்டத்தைமுதல்வர் ஜெயலலிதா தொடங்கியுள்ளார். ஆனால் சென்னை நகரை மேம்படுத்துவதற்காக திமுக ஆட்சிக்காலத்தில் சிறிதளவாவதுசிந்தித்திருப்பார்களா?

முதல்வர் தொடங்கியுள்ள திட்டத்தில் போக்குவரத்து, வீட்டு வசதி, மின்சாரம், குடிநீர் விநியோகம், கழிவு நீரகற்றல் உள்ளிட்ட பலமுக்கிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு வரும் யாருமே, இவ்வளவு குறுகிய காலத்தில் அத்தனை அடிப்படை வசதிகளும் சிறப்பாகமேம்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள், தயாநிதி மாறனைத் தவிர என்று கூறியுள்ளார் ஜெயக்குமார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X