அதிமுகவுக்கு தாவும் ஆனந்தராஜ்!
சென்னை:
நடிகர் ஆனந்தராஜ் அதிமுகவில் சேரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வில்லனாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, இடையில் ஹீரோவாக உயர்ந்து, பின்னர் மீண்டும் வில்லனாகவும், குணச்சித்திரநடிகராகவும் நடித்து வருபவர் நடிகர் ஆனந்தராஜ். புதுவையைச் சேர்ந்த இவர் சமீப காலமாக அரசியல் கட்சியில் சேரும் ஆசையுடன்வலம் வருகிறார்.பாமகவுக்கு எதிராக கடுமையான நிலையை எடுத்துள்ள ஆனந்தராஜ் அவ்வப்போத டாக்டர் ராமதாஸை கடுமையாக விமர்சிக்கிறார்.மேலும், புதுவை சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
விஜயகாந்த் தொடங்கியுள்ள புதிய கட்சியில் ஆனந்தராஜ் சேரவிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதற்கு நேர் மாறாக அதிமுகவில்சேர ஆனந்தராஜ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அவர் முன்னிலையில் தன்னைஅதிமுகவில் ஆனந்தராஜ் இணைத்துக் கொள்வார் எனத் தெரிகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக ஆனந்தராஜ் புதுவையில் பிரசாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், கர்நாடக சட்டசபை இடைத் தேர்தலிலும் அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளருக்காக பிரசாரம் செய்தார்.
விஜயகாந்த் பக்கம் நடிகர்கள் சாய்வதைத் தடுக்கும் வகையில் அதிமுக களத்தில் இறங்கியிருப்பதையே ஆனந்தராஜ் விவகாரம் காட்டுகிறது.மேலும் பல நடிகர், நடிகைகளை கட்சிக்குள் இழுக்க ஏற்கனவே கட்சியில் உள்ள நடிகர்கள் ராராதவி, எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்டோருக்குமுதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications