அனாமிகாவுக்கு எதிரான ஆதாரம்: ஒப்படைத்தார் ஜாகுவார்!
சென்னை:
நடிகை அனாமிகாவுக்கு தான் ரூ. 7 லட்சம் கொடுத்ததற்கான ஆதாரத்தை சண்டைப் பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம்போலீஸாரிடம் கொடுத்தார்.
அதேபோல, அனாமிகாவும் ஒரு புகார் கொடுத்தார். அதில் தங்கம் தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறு மிரட்டுவதாககூறியிருந்தார். இதையடுத்து இருவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து இருவரும்உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றனர்.
இந்த நிலையில் அனாமிகா மீதான புகாரை பதிவு செய்து விசாரணை நடத்துமாறு சென்னை காவல்துறையினருக்குஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் அஸ்லம் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறுபோலீஸார் ஜாகுாவர் தங்கத்திற்கு சம்மன் அனுப்பினர். அதன்படி ஜாகுவார் தங்கம் தனது வழக்கறிஞர் சிவாவுடன் காவல்துறைஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள குற்றப் பிரிவு அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது போலீஸார் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார். பின்னர் அனாமிகா தன்னிடம் பணம் வாங்கியதற்கு ஆதாரமாகசி.டி. ஒன்றை போலீஸாரிடம் வழங்கினார்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |