குஷ்பு கொடும்பாவியுடன் விஜயகாந்த் கொடும்பாவியும் எரிப்பு
சேலம்:
![]() |
சேலம் மாவட்டம் ஓமலூரில் குஷ்புவைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் நடிகர் விஜயகாந்தின் கொடும்பாவியும் சேர்ததுஎரிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் போராட்டத்தை நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர்கைது செய்யப்பட்டனர்.
நடிகை குஷ்புவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந் நிலையில் குஷ்பு மீதுஎந்த நடவடிக்கையும் எடுக்காத நடிகர் சங்கத்தையும், அதன் தலைவர் விஜயகாந்த்தையும் கண்டித்து தற்போது விடுதலைச் சிறுத்தைகள்போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கூடி குஷ்பு,விஜயகாந்த்திற்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களிடம் இருவரது கொடும்பாவிகளும் இருந்தன.
அவற்றை விடுதலைச் சிறுத்தைகள் திடீரென தீயிட்டுக் கொளுத்தினர். ஆனால் அங்கு குவிந்திருந்த போலீஸார் புகுந்து பாதியிலேயேஅவற்றை அணைத்து அங்கிருந்து எடுத்துச் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.
குஷ்பு.. குவியும் வழக்குகள் ...
இதற்கிடையே குஷ்பு மீது மேலும் 6 நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதுவரை அவர் மீது மொத்தம் 10க்கும் மேற்பட்டவழக்குகள் பதிவாகியுள்ளன.
பெண்களின் கற்பு குறித்து கருத்துத் தெரிவிக்கப் போக பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் குஷ்பு.
சென்னை எழும்பூர், திருச்சி, வானூர், தாராபுரம் போன்ற நீதிமன்றங்களைத் தொடர்ந்து மேலும் 6 நீதிமன்றங்களில் குஷ்புவுக்கு எதிராகவழக்குப் போடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கரலப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரான பாமகவைச் சேர்ந்த உஷா ராஜேந்திரன், திருவள்ளூர் குற்றவியல் நடுவர்மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் பாமக செயலாளர் சண்முகம் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்தமனு மீதான விசாரணை அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலூர் தாலுகா தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைவர் ஹபிபுல்லா மதுரை 2வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் குஷ்புவுக்குஎதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதே நீதிமன்றத்தில், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட மகளிர் அணி செயலாளர் பாண்டியம்மாளும் ஒரு வழக்குப் போட்டுள்ளார். இந்தஇரண்டு மனுக்களையும் நீதிபதி விசாரைணக்கு ஏற்றுக் கொண்டு அக்டோபர் 10ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.
கும்பகோணம் குற்றவியல் நடுவர் மன்றத்தில், மாநில பாமக மகளிரணிச் செயலாளர் பானுமதி குஷ்பு மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்தவழக்கு அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 10க்கும் மேற்பட்ட நீதிமன்றங்களில் குஷ்புவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் அக்டோபர் முதல் வாரத்திலிருந்து நடிகை குஷ்பு, பல்வேறு கோர்ட்டுகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம்ஏற்பட்டுள்ளது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |