For Quick Alerts
For Daily Alerts
தமிழகம்: 2 நாளைக்கு மழை நீடிக்கும்
சென்னை:
தமிழகம் முழுவதும் இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இந் நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டிருப்பதால், மேலும் 2நாட்களுக்கு மழை இருக்கும் என நூங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் வட கிழக்குப் பருவக் காற்றும் வீசத் தொடங்கியிருப்பதால் மழை தொடர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளதாகவும்தெரிவித்துள்ளது.
சென்னை நகரில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நகர்ப் பகுதிகளை விட புறநகர்ப் பகுதிகளில் நல்லமழை பெய்துள்ளது.
அதே போல தஞ்சை, கோவை, திருச்சி, நாகர்கோவில், திருநெல்வேலி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்துபரவலாக மழை பெய்து வருகிறது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |