செக் மோசடி: ஜெயலட்சுமிக்கு பிடிவாரண்டு
ஈரோடு:
செக் மோசடி வழக்கில் ஜெயலட்சுமிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து தாராபுரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மணக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகராசு விவசாயி.தொழில் தொடங்குவதற்காக இவரிடமிருந்து ஜெயலட்சுமி ரூ.2 லட்சம் கடன் வாங்கினார்.
பின்னர் கடனை திருப்பி செலுத்துவதற்காக ஜெயலட்சுமி சண்முகராசுக்கு ஒரு செக் கொடுத்தார். அதை வங்கியில்கொடுத்த போது கணக்கில் பணம் இல்லை என்று செக் திரும்பி வந்து விட்டது.
இது தொடர்பாக சண்முகராசு தாராபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சண்முக ராசுவின் வழக்கறிஞர், ஜெயலட்சுமிக்கு பிடிவாரண்டு பிறப்பிக்க வேண்டும் என்று கோரி தாக்கல்செய்த மனுவை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட்டு தாண்டவன்,
ஜெயலட்சுமிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து வருகிற டிசம்பர் 2ம் தேதிக்குள் ஜெயலட்சுமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று தாராபுரம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |