For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவின் புதுவாழ்வு திட்டம்: 15 மாவட்டங்களில் அமல்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

கிராம வளர்ச்சிக்கு அதிகாரிகளை நம்பாமல் தனியார் மூலம் உலக வங்கி கடன் உதவியுடன் 15 மாவட்டங்களில்"புது வாழ்வு என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

வரும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே இத்திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது.கிராம வளர்ச்சிக்கு என ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பல கோடியை தமிழக அரசு ஒதுக்குகிறது.

இந்த நிதி, ஊரக வளர்ச்சி துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சி, வருவாய், சமூக நலம் போன்ற துறைகள் மூலம்அமல்படுத்தப்படுகிறது. ஆனால் மக்களுக்காக ஒதுக்கப்படும் பணம், "சிகப்பு நாடா முறையால் தாமதமாகமக்களுக்கு சென்றடையும்.

மேலும், ஊழல் காரணமாக பாதிக்கு மேற்பட்ட பணம் வளர்ச்சிப் பணிகளுக்கு போய்ச் சேர்வதில்லை. இதனால்திட்டத்தின் நோக்கம் நிறைவேறுவதில்லை. மக்களிடம் அரசுக்கு அவப்பெயர் தான் ஏற்படுகிறது.

இதைத் தவிர்ப்பதற்காக கிராம வளர்ச்சிக்கான திட்டங்களை தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தமுதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். "ஸ்ரீஜன் என்ற தொண்டு நிறுவனம் மூலம் "புது வாழ்வு திட்டம்நிறைவேற்றப்பட உள்ளது.

இந்நிறுவனம் சுயஉதவிக் குழுக்கள், கிராமக் குழுக்களை ஏற்படுத்தும். ஏற்கனவே கர்நாடகா, ராஜஸ்தான், ம.பி.,சட்டீஸ்கார் ஆகிய மாநிலங்களில் கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்கு வறுமை ஒழிப்பு திட்டங்களைசெயல்படுத்துவதற்காக குழுக்களை அமைத்தல், சங்கங்களை ஒருங்கிணைத்தல், மனிதவள மேம்பாடு ஆகியபணிகளை இந்நிறுவனம் செய்து வருகிறது.

ராஜஸ்தான், ம.பி., மாநிலங்களில் மட்டும் இந்நிறுவனம் ரூ. 3 கோடி அளவில் மழைநீர் சேகரிப்பு மூலம் பாசனதிட்டங்களை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் பஞ்சாயத்து அளவில் கண்மாய்களை சீரமைக்கும் பணிகளைசெய்து வருகிறது.

தமிழகத்தில் இந்நிறுவனம் வறுமை ஒழிப்பு, வருவாய் பெருக்க திட்டங்கள் மூலம் பெண்கள் முன்னேற்றம்ஆகியவற்றை செயல்படுத்த உள்ளது. இதற்காக சமூக நலத்துறையின் கீழ் "தமிழ்நாடு புது வாழ்வு சொசைட்டிஎன்ற அமைப்பை துவக்கி உள்ளது.

தமிழகத்தில் நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம், சேலம், தேனி, திருநெல்வேலி, திருவள்ளூர்,திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம் ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள 70பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள 2,300 பஞ்சாயத்துகளில் இத்திட்டம் ஆறு ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும்.

இதற்கான நிதி உலக வங்கியிடம் இருந்து பெறப்பட உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ஸ்ரீஜன் நிறுவனமேநேரடியாக ஆட்களை தேர்வு செய்ய உள்ளது.

அரசு பணியில் இருந்தும் "டெபுடேஷனில் ஆட்கள் நியமிக்கப்படுவர். ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் மாவட்ட திட்டஅலுவலர்கள், ரூ.14 ஆயிரம் சம்பளத்தில் உதவி மேலாளர்கள் (மார்க்கெட்டிங், சுற்றுச்சூழல், சமூகபாதுகாப்பு,அக்கவுன்ட்ஸ், நிதி), ரூ. 8,000 சம்பளத்தில் அணித் தலைவர்கள், ரூ. 6,000 சம்பளத்தில் ஒருங்கிணைப்பாளர்கள்(சமூக ஒருங்கிணைப்பு, தொழில் வளர்ச்சி, தொழில் நிதி, அக்கவுன்ட்ஸ்) என நியமிக்கப்பட உள்ளனர்.

இவ்வாறு தேர்வு செய்யப்படுவோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மிக ஏழ்மை நிலையில்

சர்வே மூலம் மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கண்டறிந்து மேம்பாட்டுக்கான திட்டங்கள்செயல்படுத்தப்படும்.

ஒவ்வொரு குழுவிலும் 50 முதல் 150 களப் பணியாளர்கள் கிராம அளவில் நியமிக்கப்படுவர்.

இதுவரை அரசு இயந்திரங்கள் என பல்வேறு துறைகள் இருந்தாலும் அவற்றை நம்பாமல், தனியார் மூலம் கிராமமக்கள் மேம்பாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்துவது என்ற புதிய முயற்சியை முதல்வர் ஜெயலலிதாமேற்கொண்டுள்ளார்.

வேலைவாய்ப்பு அலுவலகம், டி.என்.பி.எஸ்.சி., போன்றவை மூலம் அல்லாமல், தனியார் மூலமே ஆட்கள்நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு கொண்டு வரப்படும் இத்திட்டம் அ.தி.மு.க.,விற்கு கணிசமான ஓட்டுகளை பெற்றுத்தரும் என்பதால், இதை இன்னும் சில மாதங்களுக்குள் நிறைவேற்ற அரசு முனைப்புடன் உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X