For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதிபதிகள் நியமனம்: உளவுப் பிரிவு க்ளியரன்ஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை உயர்நீதிமன்ற தற்காலிக நீதிபதியாக இருந்த கண்ணதாசனின் பதவியை நீட்டிப்பு செய்யாமல்,அவரையும், அவரது பதவியையும் மத்திய அரசு அவமதிப்பு செய்து விட்டதாக சென்னை உயர்நீதிமன்ற மற்றும்மதுரை கிளை வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே நீதிபதிகள் போதிய அளவு இல்லாமல் பெரும் பற்றாக்குறை நிலவிவருகிறது. இந் நிலையில் தற்காலிக நீதிபதியாக செயல்பட்டு வந்த கண்ணதாசனின் பதவிக் காலம் சமீபத்தில்முடிவுக்கு வந்தது.

இவரது பணியை நீட்டித்து உத்தரவு எதையும் மத்திய அரசோ, உச்ச நீதிமன்றமோ பிறப்பிக்காததால்,கண்ணதாசனின் பதவிக்காலம் தானாகவே முடிவுக்கு வந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி நீதிபதியாக உயர்ந்தவர் கண்ணதாசன். அவரதுபதவியை இப்படி சத்தமே இல்லாமல் முடித்து விட்டதால் மத்திய அரசு மீதும், உச்சநீதிமன்றம் மீதும் உயர்நீதிமன்றவழக்கறிஞர்கள் கோபமடைந்துள்ளனர்.

இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை வழக்கறிஞர்கள்தனித் தனியாக கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில், நீதிபதி கண்ணதாசனின் பதவிக்காலம், எந்தவித மரியாதையும் இல்லாமல் முடிவுக்கு வந்துள்ளது. இது கடும்கண்டனத்துக்குரியது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராகப பணியாற்றியவர் கண்ணதாசன்.

வழக்கறிஞராக இருந்தபோதும் சரி, நீதிபதி பணியில் இருந்தபோதும் சரி தனது பதவிக்கு மிகுந்தமரியாதையையும், கெளரவத்தையும் தேடித் தந்தவர். கண்ணதாசன் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.அவர் தொடர்ந்து நீதிபதியாக பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறோம்.

கண்ணதாசனின் பதவிக்காலம் நீட்டிக்கப்படாவிட்டால் அது தமிழகத்திற்கும், நீதித்துறைக்கும் இழைக்கப்படும்அவமானமாகும். எனவே அவரது பதவியை நீட்டித்து உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றுவழக்கறிஞர்கள் கோரியுள்ளனர்.

இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக 5 நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான உத்தரவைகுடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரைத்துள்ள அவர்களது பெயர்கள்: தனபாலன், மனோகரன், ஆறுமுகப் பெருமாள்ஆதித்தன், முருகேசன், ஜெயபால்.

இவர்களது பெயர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரித்த பின்னர் அவர்களது நியமன உத்தரவுகளை மத்திய அரசுபிறப்பிக்கும்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மார்க்கண்டேய கட்ஜூ இருந்தபோது 21 பெயர்களைப்பரிந்துரைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தார்.

அதில் 17 பெயர்களை இறுதி செய்து உச்சநீதிமன்றம் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தது. அந்தப்பெயர்களை மத்திய சட்ட அமைச்சகம் பரிசீலனை செய்து, உளவுப் பிரிவு (ஐ.பி) ஆய்வுக்கு அனுப்பியது.

உளவுப் பிரிவு அதிகாகள், நீதிபதி பதவிகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் குறித்து ரகசிய விசாரணைநடத்தியது. இதில் மனோகரன், திமுக அனுதாபி என தெரிய வந்தது. இதுகுறித்து அறிக்கை அனுப்பியஇன்டலிஜென்ஸ் பீரோ பின்னர், மனோகரன் கட்சி சார்பற்றவர் என திருத்தப்பட்ட அறிக்கையை மத்திய சட்டஅமைச்சகத்திடம் அளித்தது.

இதையடுத்து 5 பேரின் பெயர்களை சட்ட அமைச்சகம் இறுதி செய்து தற்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X