நாகை: கடலில் மூழ்கி இறந்த 6 பேரின் உடல்கள் மீட்பு!
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்:
நாகை மாவட்டம் நாகூர் அருகே கடலில் மூழ்கி இறந்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 6 பேரின் உடல்களும்மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
நாகூர் அருகே கப்பல் சரக்கு இறக்கு தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் மும்பையைச்சேர்ந்த ஒரு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நறுவனத்திற்குச் சொந்தமான ஒரு படகு கடலில் சென்றபோது தரைதட்டி நின்றது.இதையடுத்து அதில் இருந்தவர்களுக்கு உணவு, மருந்து கொண்டு செல்வதற்காக அதே நிறுவனத்தைச் சேர்ந்த 6பேர் கொண்ட குழு இன்னொரு படகில் சென்றது. அப்போது படகு கடலில் கவிழ்ந்து 6 பேரும் உயிரிழந்தனர்.
இதில் ஒருவரது உடல், நாகை கடற்கரையில் ஒதுங்கியது. மற்ற ஐந்து பேரின் உடல்களும் 8வது முகத்துவாரத்தில்கரை ஒதுங்கின.
இந்த உடல்களையும் மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவற்றை உறவினர்களிடம்ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications