• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் நல்லவர் தான், ஆனால்: ஜெயா

By Staff
|

டெல்லி:

இந்தியா டுடேவின் ஆஜ் தக் தொலைக்காட்சிக்கு பாஜக தலைவர் அத்வானியின் சிபாரிசின் பேரில் முதல்வர் ஜெயலலிதா சிலநாட்களுக்கு முன் சிறப்புப் பேட்டியளித்தை நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். இந்தப் பேட்டி வரும் ஞாயிற்றுக்கிழமைஒளிபரப்பாகவுள்ளது.

முன்னணி பத்திரிக்கையாளரும் இந்தியா டுடேவின் குரூப் எடிட்டருமான பிரபு சாவ்லா, ஜெயலலிதாவைப் பேட்டி கண்டுள்ளார்.

20ம் தேதி ஒளிபரப்பாக உள்ள அந்தப் பேட்டியில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:

திமுக கூட்டணியைச் சேர்ந்த 12 மத்திய அமைச்சர்களையும் பிரதமர் மன்மோகன் சிங்கால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த 12பேரின் ஒரே வேலை எனது அரசின் மதிப்பைக் குறைப்பது தான். அந்த வேலையைத் தான் இவர்கள் செய்து வருகின்றனர்.

இவர்களை பிரதமரால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், மன்மோகன் அடிப்படையில் மிகச் சிறந்த மனிதர், மாபெரும்பொருளாதார வல்லுனர்.

அவரை நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால், அமைச்சர்களைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில், குறிப்பாக தமிழக அமைச்சர்களைகட்டுப்பாட்டில் வைக்கும் விஷயத்தில், அவரது கைகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசியல் தரத்தை மிகவும் கேவலமான நிலைக்குக் கொண்டு சென்றது திமுக தான். இப்படிப்பட்ட தரங்கெட்டஅரசியலை உலகில் எங்குமே பார்க்க முடியாது.

அரசியலில் கொஞ்சமாவது நாகரீகம் இருக்க வேண்டும். ஆனால், 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில்என்னைப் படுத்திய பாடு இருக்கிறதே (ஊழல் வழக்குகள் போடப்பட்டதை சொல்கிறார்), அது மிக மிக மோசமானது.கடுமையாக கண்டிக்கத்தக்கது.

அது போன்ற அரசியலில் நான் ஈடுபட்டதே இல்லை என்றார்.

நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் படுதோல்வி அடைந்தது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா,

எல்லோரது அரசியல் வாழ்விலும் வெற்றியும் தோல்வியும் இருக்கும். அந்தத் தேர்தலில் நாங்கள் தோற்றாலும் அடுத்து வந்தசட்டமன்ற இடைத் தேர்தலில் நாங்கள் தானே வென்றோம். இதன் மூலம் மக்கள் என் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதுஉறுதியாகிறது. நான் அவர்கள் பக்கம் இருக்கிறேன் என்பதை மக்கள் தாமதமாக உணர்ந்துள்ளார்கள். தமிழகத்தில் எனக்கு மாற்றுகிடையாது என்றார்.

அடுத்த ஆண்டு நடக்கப் போகும் சட்டமன்றத் தேர்தல் குறித்த கேள்விக்கு பதிளித்த ஜெயலலிதா,

நான் கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கையை கணக்கில் வைத்துக் கொண்டு போவதில்லை. மக்களின் எண்ண ஓட்டத்தைமனதில் வைத்து அரசியல் நடத்துகிறேன். நான் அவர்களோடு இருப்பதால் மக்களும் என்னோடு இருக்கிறார்கள் என்பதை நான்அறிவேன். எனது கூட்டணி 6 கோடி தமிழக மக்களோடு தான் என்றார்.

அப்படியானால், தனித்துப் போட்டியிடுவீர்களா என்று கேட்டதற்கு, கூட்டணி விஷயத்தில் நான் திறந்த மனதோடு இருக்கிறேன்என்றார்.

தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டு மூதலனத்தைப் பெற நீங்கள் ஏன் வெளிநாடுகளுக்குச் செல்வதில்லை என்ற கேள்விக்கு,

நான் சென்னையில் அமர்ந்து கொண்டே போர்ட், ஹூயுண்டாய், செயிண்ட் கோபைன், நோகியா, பிளக்ட்ரானிக்ஸ்,பிஎம்டபிள்யூ, ஸ்டேண்டர்ட் சார்ட்டர்ட், ஏபிஎன் ஆம்ரோ ஆகிய நிறுவனங்களை, வங்கிகளை தமிழகத்துக் கொண்டுவந்துள்ளேன்.

அவர்களாகவே தமிழகத்தைத் தேடி வருகிறார்கள் என்று பதிலளித்தார் ஜெயலலிதா.

முந்தைய ஜெயலலிதாவை விட இப்போதைய ஜெயலலிதா சிறப்பானவரா என்ற கேள்விக்கு, காலம் மாறும்போது நாமும் சேர்ந்துமாறுகிறோம். மாற்றம் இல்லாவிட்டால் வளர்ச்சி இல்லை. எந்தத் தனிப்பட்ட மனிதனும் காலத்தோடு சேர்ந்து மாறித்தான் ஆகவேண்டும்.

ஒருவரது வெற்றி அவர்களது தவறுகளைப் புரிந்து கொள்வதில் தான் இருக்கிறது. தவறு செய்தால் அதைத் திருத்திக் கொள்வதுதான் சரி. விட்டுக் கொடுத்து செல்பவர் தான் சிறந்த தலைவராக இருக்க முடியும் என்றார்.

உங்களுக்கு ஏதாவது நிறைவேறாத அரசியல் கனவு இருக்கிறதா என்ற கேள்விக்கு,

எனக்கு அரசியல் கனவே கிடையாது. நான் தமிழக முதல்வராவேன் என்று கனவு கூட கண்டதில்லை. அது மாதிரி எனக்குஏதாவது பெரிய பொறுப்பு தரப்பட்டால் அதை நிச்சயம் ஏற்பேன் என்றார் ஜெயலலிதா.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாஜக வென்றால் தனக்கு துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று டீல் போட்டவர்ஜெயலலிதா என்பது நினைவுகூறத் தக்கது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X