For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை: நீதிபதிகள் நியமனத்தில் தாமதம்: உச்சநீதிமன்றம் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் கண்ணப்பனுக்கு (இப்போது நியூமராஜிப்படி ராஜ கண்ணப்பன்) எதிராக 2லட்சத்து 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் போயஸ் தோட்டம், மன்னார்குடி கும்பல், இவர்களுக்கு அடுத்தபடியாக ஏகத்துக்கும் சொத்துகுவித்தவர் அப்போதைய பொதுப்பணித்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த கண்ணப்பன் தான்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஓட்டாண்டியாக இருந்த கண்ணப்பன் இப்போது பெரும் கோடிக்களுக்கு அதிபதி.சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் இவர் வளைத்துப் போட்ட நிலங்கள் ஏகப்பட்டவை.

அதிமுக ஆட்சி கவிழ்ந்தும் பலர் மீதும் திமுக ஆட்சியில் தொடரப்பட்டது. ஆனால், அதிமுகவை விட்டு லாவகமாக விலகி திமுககூட்டணிக்கு ஆதரவாக மாறிவிட்டார் கண்ணப்பன். இதனால் அவர் மீதான வழக்குகள் வேகம் பிடிக்கவில்லை. ஆனாலும்சொத்துக் குவிப்பு உள்பட பல வழக்குகள் இவர் மீது போடப்பட்டன.

வருமானத்தை மீறி ரூ. 11.5 கோடி சொத்து குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அவர் மனைவி நளாயினி, தம்பி செந்தாமரை உள்பட மொத்தம் 20 பேர் இந்த வழக்கில் உள்ளனர்.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகும் கண்ணப்பன் மீதான வழக்குகள் வேகம் பிடிக்கவில்லை. காரணம், இவர் மாட்ட மாட்ட அதிமுகஆட்சியில் நடந்த ஊழல்கள் தான் வெளிச்சத்துக்கு வரும் என்பதால் இவரை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை.

இப்போது மக்கள் தமிழ் தேசம் என்று சும்மாகாச்சுக்கும் ஒரு கட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார் கண்ணப்பன்.

இந் நிலையில் கண்ணப்பன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நீதிபதி மதிவாணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது கண்ணப்பனும் அவரது மனைவி நளாயினும் நீதிமன்றத்திற்கு வரவில்லை. அவரது தம்பி செந்தாமரை உள்பட 3 பேர்ஆஜரானார்கள்.

அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை அடுத்த மாதம் தாக்கல் செய்வதாக விசாரணை அதிகாரி தெரிவித்தார். இதைதொடர்ந்து விசாரணையை டிசம்பர் மாதம் 23ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்ரவிட்டார்.

இந்த வழக்கில் மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் நகலைவழங்க கோரி ஏற்கனவே கண்ணப்பன் மனு செய்துள்ளார்.

ஆனால் தனி நீதிமன்றத்தில் இருந்த 2 ஜெராக்ஸ் இயந்திரங்களும் பழுதாகிவிட்டதால், புது இயந்திரம் கேட்டு அரசுக்குகோரிக்கை விடப்பட்டிருந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் ஒரு ஜெராக்ஸ் இயந்திரத்தை நீதிமன்றத்துக்கு தமிழகஅரசு வழங்கியிருக்கிறதாம்.

அதில் நகல் எடுக்கும் பணி கடந்த 14ம் தேதி தான் தொடங்கியுள்ளது. ஆனால், இதுவரை 5,000 பக்கங்கள் தான் நகல்எடுக்கப்பட்டுள்ளதாம். இன்னும் 2 லட்சம் பக்கங்களை நகல் எடுக்க வேண்டும்.

இதுக்கு எத்தனைை மாதங்கள் ஆகுமோ தெரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X