குஷ்பு எதிர்ப்பு போராட்டங்கள் சரியல்ல: பாஜக
சென்னை:
குஷ்புவுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய பாஜக துணைத் தலைவர் வெங்கையா நாயுடு,திருமணத்துக்கு முன்பு செக்ஸ் என்ற குஷ்புவின் பேச்சை நாங்கள் ஆதரவிக்கவில்லை. அவர் சொல்லும் கருத்துக்கள் நமதுகலாச்சாரமே அல்ல. அதற்காக அவருக்கு எதிரான வன்முறைப் போராட்டங்களை ஏற்க முடியாது.
இந்தப் போராட்டங்களை ஆதரிக்கக் கூடாது. ஆதரித்தால் ஒரு தவறான முன் உதாரணமாகப் போய்விடும். ஜனநாயகத்தில்கருத்து சொல்லவும் எதிர்க்கவும் இடமுண்டு. கருத்து சொன்னால் அதை எதிர்த்து போராடுவது என்பது சரியல்ல.
பிகாரில் காட்டு ராஜாங்கம் நடத்தி வந்த லாலுவை மக்கள் தோற்கடித்துவிட்டார்கள். பிகாரில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம்,விரைவில் டெல்லியிலும் உணரப்படும்.
தமிழகத்திலும் கர்நாடகத்திலும் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்க மத்திய அரசு தவறிவிட்டது. வரும்நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்தப் பிரச்சனையை பாஜக எழுப்பும் என்றார் நாயுடு.












Click it and Unblock the Notifications