குஷ்பு பார்த்த கொலை: சிபிஐ விசாரணை?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Kushboo
சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடந்த ஒரு பார்ட்டியின்போது ஒரு குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டதை குஷ்புவும் போலீசாரும் மறைத்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் என எழும்பூர் நீதிமன்றம்அறிவித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் அந்தக் கொலை நடந்தபோது குஷ்புவும் அந்தப் பார்ட்டியில் இருந்தார். ஆனால், கொலையைபோலீசிடம் அவர் தெரிவிக்கவில்லை. பின்னர் குமுதம் பத்திரிக்கைக்கு ஒரு பேட்டியளித்தபோது, அந்தக் கொலைச் சம்பவம்தனது மனதை மிகவும் பாதித்ததாக குஷ்பு கூறியிருந்தார்.

இதையடுத்து குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிந்தும் அதை போலீசுக்குத் தெரிவிக்காமல்மறைத்த குஷ்பு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

இந்தக் கொலையை போலீசார் ஏன் விசாரிக்காமல் விட்டார்கள் என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும், மேலும் இக் கொலைகுறித்து சிபிஐ அல்லது மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள்சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதி மகாராஜன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கொலை வழக்கை போலீசார் விசாரிக்காமல் மறைத்தது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணையோ, டிஜிபிதலைமையிலான விசாரணையோ அல்லது சிபிஐ விசாரணையோ தேவையா என்பது குறித்து ஓரிரு நாளில் உத்தரவிடப்படும்என்றார்.

பின்னர் வழக்கை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். குமுதம் ஆசிரியர் டிசம்பர் 15ம் தேதி ஆஜராகி சாட்சியளிக்கவும் நீதிபதிஉத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+