For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தபாலில் வரும் சபரிமலை பிரசாதம்!

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

சபரிமலை பிரசாதம் பெறு விரும்புவோருக்கு தபாலில் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும் என்று திருவாங்கூர் தேவஸ்தானம்அறிவித்துள்ளது.

சபரிமலைக்கு பயணம் செய்து சாமி தரிசனம் செய்யாமலேயே இனி வீடு தேடி சபரிமலை பிரசாதம் தபாலில் வரும். இதற்கானஏற்பாட்டை திருவாங்கூர் தேவஸ்தானம் செய்துள்ளது.

மகர ஜோதி விழாவை முன்னிட்டு சபரிமலை பிரசாதம் பெற விரும்பும் பக்தர்கள் ரூ. 180க்கு சபரிமலை திருவாங்கூர்தேவஸ்தானம் மேலாளருக்கு மணியார்டர் அனுப்பினால் போதும்.

அவர்களின் வீடு தேடி அய்யப்பன் பிரசாதம் தபாலில் வந்து சேரும் என்று மாவட்ட தபால் சூப்பிரண்ட் கே. சுகுமாறன்தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தபால் சேவை ஜனவரி 10ம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்தார்.

செல்போன் தடை:

கார்த்திகை மாதம் பிறந்து சபரிமலை சீசன் தொடங்கிவிட்டதை தொடர்ந்து சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள்கூடுவார்கள். இதற்காக பத்தினமிட்டா, வடசேரிக்கரை, நிலக்கல், பலாப்பள்ளி, பம்பை, எருமேலி உள்பட பல பகுதிகளில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சபரிமலை சன்னிதானத்தில் அய்யப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணிக்குஅமர்த்தப்பட்டுள்ளனர். சன்னிதான வளாகத்தில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 படிமற்றும் தங்க கொடி மரம் அருகே சிதறு தேங்காய் உடைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் பெருமளவில் சன்னிதானத்தில் தரிசனத்துக்கு கூடுவதால், அவர்களுக்கு இடையூறாக இருக்கும் என்று பஸ்மக் குளத்தில்நீராடி மகர விளக்கு, மண்டல பூஜை காலங்களில் சன்னிதானத்தில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மழையால் பக்தர்கள் அவதி:

இதற்கிடையே சபரிமலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் பெரிதும்அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சபரிமலையில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்து வருவதால் பக்தர்கள் பெரும் சிரமத்துடன் மலை ஏறினர். மழையினால்மலைப் பாதைகளில் சேறும் சகதியுமாக உள்ளதால் பல பக்தர்கள் வழுக்கி விழுந்து காயமடைந்தனர். சில பக்தர்கள் மழைகாரணமாக மலை ஏற முடியாமல் அவதிக்குள்ளாயினர்.

திருப்பதியிலும்..

இதே போல் திருப்பதி-திருமலையிலும் பெய்து வரும் தொடர் மழையால் அந்த மலை வழிப்பாதையில் ஆங்காங்கேநிலச்சரிவுகள் ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் மலைக்கு செல்லும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அதனால் பக்தர்கள் மலைக்கு செல்ல பஸ்க்காக நீண்ட நேரம் கீழ் திருப்பதியில் மழையில் காத்துக் கிடக்க வேண்டிய சூழ்நிலைஏற்பட்டுள்ளது.

திருமலையில் வழக்கம் போல் கூட்டம் அதிகமாகவே உள்ளது. மேலும் மழை காரணமாக திருமலையில் அதிக குளிர்வாட்டியெடுப்பதால் பக்தர்கள் தங்குமிடம் கிடைக்காமல் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X