ரத்தான கிரிக்கெட்: பணத்தை கேட்கும் ரசிகர்கள்
சென்னை:
இந்தியா-தென்னாப்பிரிக்க இடையிலான கிரிக்கெட் போட்டி ரத்தானதால் டிக்கெட் தொகையை ரசிகர்களுக்கு திருப்பித் தரஉத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்திய-தென்னாப்பிரிக்க அணிகள் இடையிலான 3வது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தொடர்ந்து மழை நீடித்ததால் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்க அணி முதன் முறையாக சென்னையில் ஆட இருந்ததால் ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் வாங்கியதோடுமட்டுமின்றி மழையால் ஆட்டம் நடைபெறுவது சிரமமாக இருந்தாலும் ஓவர்கள் குறைக்கப்பட்டாவது போட்டி நடக்கும் என்றுநம்பியிருந்தார்கள்.
இதனால் காலையில் இருந்தே ஸ்டேடியத்திற்கு வந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது காத்துக் கிடந்தனர்.
ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக வந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்களிடையேஅதிருப்தி நிலவியது. போட்டிதான் நடக்கவில்லை, பணமும் அம்பேல் ஆகிவிட்டதே என்று புலம்பியபடி சென்றனர்.
டிக்கெட் விற்பனை மூலம் 3 கோடி ரூபாய் வரை வசூலாகியுள்ளது. எப்படிப் பார்த்தாலும் அக்டோபர், நவம்பர் மாதங்கள்மழைக்காலம் என்று தெரிந்தே ஏன் சென்னையில் கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும்?
கிரிக்கெட் போட்டி தொடங்கி பாதியில் நின்று இருந்தாலும் பராவாயில்லை. போட்டி தொடங்கும் சூழ்நிலையே இல்லாத போதுடிக்கெட் பணத்தை திருப்பி தருவது தான் நியாயம். எனவே கிரிக்கெட் கிளப் ரசிகர்களை ஏமாற்றிவிட்டது.
ஆட்டம் தொடங்கப்படாமல் ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கப்படுமா? என்றுதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தரப்பில் கேட்டதற்கு, டிக்கெட்டின் பின் பகுதியிலேயே எக்காரணத்தை கொண்டும் பணம் திருப்பிதரப்படாது என்று தெளிவாக அச்சிடப்பட்டுள்ளதை பார்க்கவில்லையா என்று எதிர் கேள்வி கேட்டனர்.
எனவே, நிர்வாக செலவு போக மீதி பணத்தை டிக்கெட் வாங்கியவர்களுக்கு திருப்பித் தரும்படி நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்.கிரிக்கெட் டிக்கெட் விற்பனையிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. இது பற்றி உதவி கமிஷனர் அந்தஸ்தில் உள்ள ஒருவரைநியமித்து விசாரிக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
இதே போல வழக்கறிஞர் எம்.அகிலா கோசல்ராம் மூலம் கோட்டூரைச் சேர்ந்த என்.மல்லியப்பன், சந்திரசேகர் ஆகிய கிரிக்கெட்ரசிகர்களும் டிக்கெட் பணத்தை திருப்பி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்திய-தென்னாப்பிரிக்க கிரிக்கெட் போட்டிக்காக டிக்கெட் வாங்கியவர்கள் அதே டிக்கெட்டை பயன்படுத்தி அடுத்த மாதம்நடைபெறவுள்ள இந்திய-இலங்கை டெஸ்ட் தொடரை பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.
இந் நிலையில் கிரிக்கெட் போட்டிக்கு வசூலான தொகையை அப்படியே வெள்ள நிவாரணத்துக்கு பயன்படுத்தத் தர வேண்டும்என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். கிரிக்கெட் பார்க்காமல் ரசிகர்கள் தந்த இந்தப் பணம் பொது நலப்பணிக்குச் செல்ல வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
பாபாவிடம் ஆசி வாங்கிய சச்சின்:
இந்த நிலையில் சென்னை கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள்தெண்டுல்கர், யுவராஜ்சிங், முரளி கார்த்திக் ஆகியோர் தனி விமானம் மூலம் புட்டபர்த்தி சென்றனர்.
புட்டபர்த்தியில் நடந்த சத்யசாய் பாபாவின் 80வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அவரிடம் ஆசி பெற்றனர்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |