For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிரட்டும் முதலைகள்: தர்மபுரி, ஜெயங்கொண்டத்தில் எங்கெங்கும் வெள்ளம்

By Staff
Google Oneindia Tamil News

தர்மபுரி:

கன மழையால் தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு நிரம்பி பல கிராமங்களுக்குள் நீர் புகுந்துள்ளது.

மேக்காலம்பட்டி ஏரியில் இருந்து வெளியேறிய நீர் பாலக்கோடு நகருக்குள் புகுந்தது. இதனால் தர்மபுரி மெயின் ரோடுஉடைபட்டுள்ளது. பாலக்கோடு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் சுடுகாடு ஆகியவை தண்ணீரில்மிதக்கின்றன.

ஜெயங்கொண்டம்:

அதே போல கொள்ளிடத்தில் கரைபுண்டோடும் வெள்ளத்தால் ஜெயங்கொண்டத்தில் சுமார் 100 கிராமங்கள் நீரால் சூழ்ப்பட்டுள்ளதனித் தீவுகளாகிவிட்டன.

உடையார்பாளையம், அனைக்குடி, அருள்மொழி, சாத்தம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

Near Krishnagiri
கொள்ளிடம் ஆற்றின் நடுவே உள்ள தீவு கிராமங்களான அளக்குடி, முதலைமேடு, நடுவக்காடு கிராமங்கள் முழுவதுமாகமூழ்கிவிட்டன. முதலைமேடு கிராமத்திலிருந்து சுமார் 3,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 50 பேரை மீட்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.

இப் பகுதிகளில் பல கிராமங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வீடுகள் அனைத்தும் மூழ்கிவிட்டன. பலர் வீடுகளின்கூரைகள், மரங்களில் தொங்கியபடி உதவி கேட்டு அழுதபடியிருந்தனர்.

அவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

நாகை மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கிவிட்டன.

முதலைகள்...

இதற்கிடையே முதலைமேடு, நாதல் படுகை கிராமங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்ற தீயணைப்புப்படையினரை முதலைகள் சூழ்ந்து வருகின்றன. இதையடுத்து பெரும் அச்சத்துக்கிடையே மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

சிதம்பரம் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேலவன் நகருக்குள் ஒரு முதலை புகுந்தது. அந்த முதலை அந்தப் பகுதியிலேயேசுற்றி வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

அதே போல பழனி அருகே ஒட்டன்சத்திரம் அருகே அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமராவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அதையொட்டிய பகுதிகள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் அருகே நங்கநாச்சியார் அணை உடையும் அபாயம் ஏற்பட்டதால், 1.25 லட்சம் கன அடி தண்ணீர் அங்கிருந்துவெளியேற்றப்பட்டது. பரப்பலாறு, குடையனாறு, பழனி பாலாறு, வரதமாநதி, குதிரையாறு ஆகியவற்றில் வெள்ளப் பெருக்குஏற்பட்டுள்ளதால் அந்த நீர் அமராவதி ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது.

இந்த நீர் காவிரியில் கலந்து வருவதால் கரூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் தொடர்ந்து வெள்ள அபாயம் நீடிக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X