சாத்தனூர் அணை மீண்டும் நிரம்பியது: திருவண்ணாமலையில் வெள்ளம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சாத்தனூர் அணை மீண்டும் நிரம்பி வழிகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த மழையால் சாத்தனூர் அணை அதன் முழு கொள்ளவை எட்டியது. மீண்டும்புயல் உருவாகி தற்போது பெய்து வரும் தொடர் மழையால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது.
அணையில் மொத்த நீர்மட்டம் 119 அடி என்றாலும், அணையின் பாதுகாப்பு கருதி 117 அடி வரை நிரை தேக்கி வைத்து விட்டுஉபரி நீரை பொதுப்பணித்துறையினர் வெளியேற்றி வந்தனர். பலத்த மழை காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு6,022 கனஅடியாக உள்ளதால், அணையிலிருந்து 4,726 கன அடி நீரை வெளியேற்றி வருகின்றனர்.
![]() |
இதே போல் கடலூரில் பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. கடலூரில் காட்டாற்றுவெள்ளம் கெடிலம் மற்றும் பெண்ணையாற்றில் கலக்கிறது. இதனால் இரு ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆற்றங்கரையோர நகருக்குள் வெள்ளம் புகுந்தது. கே.கே.நகர், துரைசாமி நகர் ஆகிய பகுதிகளில் ஏராளமானவீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இது போல் கெடிலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் புருஷோத்தமன் நகரில் வெள்ளம் புகுந்தது.இதனால் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்றனர்.
வெள்ளம் ஊருக்குள் புகுந்ததை அறிந்த அரசு அதிகாரிகள் விரைந்து சென்று பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |