• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளத்தில் தொடர்ந்து தத்தளிக்கும் தமிழகம்

By Staff
|

கடலூர்:

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் 4 நாட்களாக பெய்த பலத்த மழையில்பல மாவட்டங்கள் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளன.

கொள்ளிடம் ஆறு, வெள்ளாற்றில் வெள்ளம் காரணமாக ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள பூண்டி, கல்லிப்பாடி ஆகிய பகுதிகள்பாதிக்கப்பட்டன. லால்பேட்டை அருகே உள்ள கண்ணன் தோப்பு உள்பட 10 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.

வடவாறு மற்றும் கருவாட்டு ஓடையில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீராணந்தபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் நீரில்மூழ்கின. லால்பேட்டை மற்றும் ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளை சேர்ந்த சுமார் 100 கிராமங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளது.பொதுமக்களை காப்பாற்ற மீட்பு படையினர் செல்லமுடியவில்லை.

Near Salem
இந்த கிராமங்களை சேர்ந்த சுமார் 75,000 பேர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க முடியவில்லை. ஹெலிகாப்டர்மூலம் மட்டுமே உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. அவை அனைவருக்கும் கிடைக்காததால் பல கிராம மக்கள் உணவுகிடைக்காமல் பட்டினியால் வாடுகின்றனர்.

வடலூர் வாலாஜா ஏரியில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக ஓணாங்குப்பம், ராசிப்பேட்டை, கரைமேடு, அம்பாபுரம், ஓலக்குடி,ஜெயங்கொண்டம், தவக்குளம், ஆலம்பாடி, மேலக்கொளக்குடி, கீழக்கொளக்குடி உள்பட 20 கிராமங்கள் வெள்ளத்தில்மூழ்கியுள்ளன.

அங்குள்ள பொதுமக்களை மீட்க முடியாமல் மீட்பு படையினர் திணறுகிறார்கள். அவர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை.வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க தீவிர முயற்சி நடந்து வருகிறது.

ஈரோடு:

Erode
ஈரோடு மாவட்டத்தில் தாராபுரம் அருகே தரைப்பாலம் உடைந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கிருஷ்ணாபுரம்கிராமத்தையாட்டி நல்லதங்காள் நீர் தேக்கம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதிகளில் பலத்தமழை காரணமாக குளங்களில் உடைப்பு ஏற்பட்டதால் நல்லதங்காள் நீர் தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த தண்ணீர் கிருஷ்ணாபுரம் நல்ல தங்காள் தரைப்பாலம் வழியாக காட்டாற்று வெள்ளம் போல் ஓடியது. வெள்ளம் அதிகமாகஓடியதால் இந்த தரைப்பாலம் உடைந்தது. இதன் காரணமாக தாராபுரத்தில் இருந்து பகவான் கோவில், பொன்னிவாடி,எழுகாம்வலசு, குளத்து புன் செய் வலசு ஆகிய இடங்களுக்கு பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தஞ்சாவூர்:

கொள்ளிடத்தில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் 150க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. 2,000 வீடுகள்சேதமடைந்தன. பயிர்கள் மூழ்கியுள்ளன. சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெண்ணாறு,மண்ணியாறு ஆகிய ஆறுகளிலும் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் பாய்கிறது.

ஜெயங்கொண்டத்தில் தாழ்வான பகுதிகளான விக்கிரமங்கலம், அரங்கோட்டை, முட்டுவாஞ்சேரி, கோவிந்தபுத்தூர், சாத்தம்பாடி,அனைகுடி, அருள்மொழி, இடங்கண்ணி, அன்னகாரன்பேட்டை, உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் தீவுப்பகுதிகள் போல்காட்சியளிக்கின்றன.

சீர்காழியில் வெள்ளப்பகுதிகளை பார்வையிடச் சென்ற அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனின் காரும் வெள்ளத்தில் சிக்கியது.பிறகு தீயணைப்பு படை வீரர்களால் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

தர்மபுரி:

தர்மபுரியில் கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையால் 3,000 ஏக்கருக்கு மேல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி,பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. பென்னாகரம் ஏரிகள் நிரம்பி வழிந்ததால் அந்தப் பகுதிவெள்ளக்காடானது.

பாப்பிரெட்டி பகுதியில் உள்ள வாணியாறு நிரம்பி உபரிநீர் வெளியேறியதில் பாப்பிரெட்டி பகுதியில் உள்ள பல கிராமங்கள் நீரில்மூழ்கியது. இதனால் நெல், கரும்பு, மஞ்சள், குச்சகிழங்கு ஆகிய பயிர்கள் அழுகிய நிலை ஏற்பட்டுள்ளது. மேக்காலம்பட்டிஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரால் பாலக்கோடு தக்காளி மண்டி, தர்மபுரி மெயின் ரோடு ஆகிய பகுதிகள் வெள்ளத்தில்மிதக்கின்றன. மேலும் மாவட்டத்தில் உள்ள பல ஏரிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மதுரை:

Vaigai River - Madurai
மதுரை மாவட்டத்தில் 65 கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டதில் 80 கிராமங்கள் தத்தளிக்கின்றன. வைகையாற்றில்பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக கரையோரப் பகுதிகளை மூழ்கடித்ததுடன் கண்மாய் தண்ணீரும் செல்லூர் உட்பட பலபகுதிகள் தண்ணீரில் மிதக்கிறது.

மதுரையில் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்வதால் பெரியாறு, வைகை அணைகளுக்கான நீர்வரத்துஅதிகரித்துள்ளது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கன மழை பெய்வதை தொடர்ந்து வைகையாறு, சாத்தையாறு நிரம்பிவழிவதால் மதுரையில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வைகை ஆற்றில் இவ்வாறு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு வைகை அணைக்கும் மதுரை நகருக்கும் இடைப்பட்டதூரத்தில் பெய்த கன மழை தான் காரணம்.

சிவகங்கை:

மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்வீரகனூர் அணையில் இருந்து 20,000 கனஅடி நீர் பார்த்திபனூர் மதகு அணைக்கு திறந்துவிடப்பட்டது. இத்தண்ணீர் ராமநாதபுரம்மாவட்ட எல்லையை தொட்டது. இதனால் பரமக்குடி வைகை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

பரமக்குடி வைகை ஆற்றில் குடிசைபோட்டு வசிப்பவர்களும், கரையோரங்களில் வசிப்பவர்களும், அவசரமாக வெளியேறினர்.இதில் குமாரகுறிச்சியை சேர்ந்த பாலு மற்றும் அவரது மனைவி பஞ்சவர்ணம் ஆகியோர் வெள்ளத்தில் சிக்கினர்.

பரமக்குடி தீயணைப்புத்துறையினர் அவர்களை மீட்க முயற்சித்தனர். வெள்ள நீர் அதிகமாக சென்றதால் மீட்க முடியவில்லை.பின்னர் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு அவர்கள் இருவரும் மீட்கப்பட்டனர்.

திருநெல்வேலி:

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் கருப்பா நதி அணை நிரம்பியது. குண்டாறு அணை ஏற்கனவேநிரம்பியுள்ளது. இந்த அணைகள் நிரம்பியதால் உபரிநீர் வெளியேற்றப்பபடுகிறது. இதனால் அந்தப்பகுதியில் உள்ள வீடுகள்வெள்ளத்தில் மூழ்கின. மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X