For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தினமும் சாம்பார்.. முகாமில் அதிகாரிக்கு அடி!!

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சை:

வெள்ள நிவாரண முகாமில் தங்கியிருந்த பொது மக்கள் சிலர் தினமும் சாம்பார் சாதம் வழங்கப்படுவதை கண்டித்து தகராறுசெய்தனர். கிராம அதிகாரியையும் தாக்கினர்.

கும்பகோணம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நகர மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அசூர், அகரத்தூர், இனார் அசூர், சாத்தங்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த 1,200 பேர் இந்த பள்ளியில் தங்கியுள்ளனர்.

இவங்களுக்கு உணவு வழங்கும் பணியில் இனாம்அசூர் கிராம அதிகாரி ஞானசேகர்(வயது 53) ஈடுபட்டிருந்தார். அப்போதுசிலர் மதிய உணவு சரியில்லை என்று கிராம அதிகாரியிடம் தகராறு செய்தனர். தினமும் சாம்பார் சாதம் தானா என்று கேட்டு கிராமஅதிகாரியிடம் வாக்குவாதம் செய்தனர்.

வாக்குவாதம் முற்றியதில் சிலர் கிராம அதிகாரியை தாக்கினர். இது தொடர்பாக கும்பகோணம் போலீசார் வழக்கு பதிவு செய்துதாக்குதல் நடத்திய திமிர்ப் பிடித்த ஆசாமிகளான அசூரை சேர்ந்த மாரியப்பன், சந்திரன், ராஜமாணிக்கம், சரவணன், சாத்தங்குடிஜோதிபாசு ஆகியோரை தேடி வருகின்றனர்.

கடலூரில் பெண்கள் முற்றுகை:

இதற்கிடையே கடலூரில் நிவாரணம் கேட்டு பெண்கள் தாசில்தார் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர்.

தொடர் மழையால் பெண்ணையாறு, கெடிலம் ஆறுகளில் வெள்ளத்தால் கடலூரில் தாழ்வான பகுதிகளில் உள்ளசூரப்பன்நாயக்கன் சாவடி, குண்டூர் உப்பலவாடி, என்ஜிஓ நகர், பூந்தென்றல் நகர், புதுப்பாளையம், புதுத் தெரு,வன்னியார்பாளையம், வண்ணாரப்பாளையம், முதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது.

இந்த நிலையில் அப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் நிவாரணம் கேட்டு கடலூர் கடற்கரை சாலையில் உள்ள தாசில்தார்அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பிறகு தாசில்தாரிடம் நிவாரண உதவி கோரி மனு கொடுத்தனர்.

உதவிக்கு கமிஷன்:

அதே போல சென்னை அருகே பொன்னேரியில் நிவாரண உதவிக்கு கமிஷன் பெறப்பட்டதால் பொதுமக்கள் கொதிப்படைந்தனர்.

இந்த நிலையில் திடீரென அந்த உதவியும் நிறுத்தப்பட்டுள்ளது. பொன்னேரி ஊராட்சிகளில் மழை நிவாரண கணக்கெடுப்பு சரியாக நடக்க வில்லை என்றுகுற்றச்சாட்டு உள்ளது. உதவித் தொகை கிடைக்காதவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நிவாரண உதவி பெறுபவர்களிடம் 200 ரூபாய் கமிஷன் பெறப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இது பற்றி கமிஷன் கொடுத்துஏமாந்த பெண்கள் தாலுகா அலுவலகம் முன்பு வந்து புகார் கொடுத்தனர். இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித் தொகை பொன்னேரிதாலுகா அலுவலகத்திலேயே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே திடீரென உதவித் தொகை வழங்குவது நிறுத்தப்பட்டு தாலுகா அலவலகத்தின் கதவு மூடப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டது. போலீசார் உதவித் தொகை பெற வந்தவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X