For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ள நிவாரணம்: 19 மாவட்டங்களுக்கு ரூ. 250 கோடி: தமிழக அரசு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் தவிர 19 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம்ரூபாயும், 10 கிலோ அரிசி, ஒரு சேலை, ஒரு வேட்டி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்குவதற்காக, பேரிடர் நிவாரண நிதியில்இருந்து ரூ.250 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இயற்கை பேரிடர் நிதியை பொறுத்தவரை ஆண்டுதோறும் அனைத்து மாநிலங்களுக்கும் குறிப்பிட்ட தொகையை மத்திய அரசுஒதுக்குகிறது. இதில் 25 சதவீதம் மாநில அரசின் பங்கு. தமிழகத்துக்கு இந்த நிதியாண்டில் மத்திய அரசு 156.81 கோடி ரூபாயும்,மாநில அரசு 52.27 கோடி ரூபாயும் சேர்த்து மொத்தம் 209.09 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதியாக வைக்கப்பட்டது.இத்தொகையில் பெரும் பகுதியை தமிழக அரசு செலவழித்துவிட்டது.

இந்நிலையில், கடந்த மாதம் பெய்த கன மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் மற்றும் நிவாரண தொகுப்பு உதவியை வழங்க ரூ.130 கோடியை தமிழக அரசுஒதுக்கியது. அடுத்த கட்ட மழையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மேலும் ரூ.250கோடியை ஒதுக்கி தமிழக அரசு தற்போது அரசாணை பிறப்பித்துள்ளது.

பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இத்தொகை ஒதுக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இத்தொகையை கூடுதல்மதிப்பீட்டு அறிக்கையில் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது. எனினும் மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.500 கோடியை நம்பியேஇந்த தொகை செலவழிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக வெளியிடப்பட்ட அரசாணையில் தமிழகத்தில் 22 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாககுறிப்பிடப்பட்டுள்ளது. இதில் விருதுநகர் போன்ற கனமழை பெய்த சில மாவட்டங்கள் இடம்பெறவில்லை. வடகிழக்குபருவமழையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி,சேலம், வேலூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், மதுரை, விழுப்புரம், பெரம்பலூர், திண்டுக்கல்,சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இதிலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ள நிவாரண நிதியுதவியாக குடும்ப அட்டைதாரர்களுக்குதலா ரூ.2 ஆயிரமும் அரிசி, வேட்டி, சேலை போன்றவையும் வழங்கப்பட்டுவிட்டதால் இந்த மூன்று மாவட்டங்களை தவிர்த்துஇதர 19 மாவட்டங்களில் நிவாரண உதவி தொகுப்பு வழங்க ரூ.250 கோடி ஒதுக்கி தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் அரிசி வாங்குவதற்கான ரேஷன் கார்டுவைத்திருந்தால் தலா ஆயிரம் ரூபாயும், அரிசி, மண்ணெண்ணெய், வேட்டி, சேலையும் வழங்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு நிவாரண உதவி தொகுப்பை பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் வருமாறு:நிவாரண உதவி பெற தகுதியுள்ள கிராமங்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கண்டறிந்து அதற்கு சான்று அளிக்க வேண்டும்.அவ்வாறு சான்றளிக்கப்பட்ட கிராமங்களில் அரிசி பெற தகுதியுள்ள கார்டுதாரர்கள் அனைவருக்கும் இந்த உதவி வழங்கப்படும்.

நகரங்களை பொறுத்தவரை, அதன் கமிஷனர்கள் அல்லது செயல் அதிகாரிகளை கலந்து ஆலோசித்து தகுதியுள்ள வார்டுகளைகலெக்டர்கள் கண்டறிந்து சான்று அளிக்க வேண்டும். இங்கும் அரிசி பெறத் தகுதியுள்ள கார்டுதாரர்களுக்கு நிவாரண தொகுப்புவழங்கப்படும்.

கிராமங்களிலும், நகரங்களிலும் மாவட்ட கலெக்டர்கள் தான் நிவாரண தொகுப்பை வினியோகிப்பர்.இந்த நிவாரண தொகுப்பை பெற தகுதியற்றவர்கள் வருமாறு:

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகள். இப்பகுதிகளுக்கு ஏற்கனவேநிவாரண தொகுப்பு வழங்கப்பட்டுவிட்டது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்கனவே நிவாரண உதவி பெற்றவர்கள் அல்லது பெற இருப்பவர்கள்.குடிசைகள் முழுமையாகவோ அல்லது ஓரளவோ சேதமடைந்ததற்காக நிவாரண உதவி பெற்றவர்கள் அல்லது பெற உள்ளவர்கள்.

இந்த நிவாரண உதவியை வழங்குவதற்காக வருவாய் நிர்வாக கமிஷனர் அரசு கணக்கில் இருந்து பணம் பெற்று அந்தந்தமாவட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை கலெக்டர்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X