For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூவத்தில் திடீர் வெள்ளம்: சென்னையை நாறடித்தது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Coovam Sindadiripettai
கூவம்- சிந்தாரிப்பேட்டை

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டு விட்டதால் அடையாறு, கூவம்ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் குறைந்து சென்னை மக்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது. மழையும் வெள்ளமும்ஓய்ந்ததால் மக்கள் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கி இருக்கிறார்கள்.

சென்னை நகரில் வெள்ள நீர் வடிய பெரிய வடிகாலாக அடையாறு ஆறும், கூவம் ஆறும் அமைந்துள்ளது. சென்னைக்கு தெற்குமற்றும் தென்மேற்கே இருந்து வரும் வெள்ளத்தை அடையாறும், வடக்கு மற்றும் வடமேற்கே இருந்து வரும் வெள்ளத்தை கூவம்ஆறும் தாங்கிக் கொண்டு கடலில் கொண்டு போய்விடும்.

Actress Rajasulochana
மடிப்பாக்கத்தில் போம்கள் மூலம் உருவாக்கப்பட்ட படகில் வெளியேற்றப்படும் நடிகை ராஜசுலோச்சனா

இந் நிலையில், சென்னை நகரில் பெய்த பேய் மழை காரணமாக நகருக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் நீர் மட்டம்வேகமாக உயர்ந்து, ஏரிகள் நிரம்பின. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி,அம்பத்தூர் ஏரி, அராபத் ஏரி, ஸ்ரீபெரும்புதூர் ஏரிகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் அடையாறு, கூவம் ஆறுகளில்திருப்பிவிடப்பட்டது.

அம்பத்தூர், ஆவடி, முகப்பேர், மதுரவாயல், நெற்குன்றம், கோயம்பேடு பகுதியில் தேங்கி கிடக்கும் தண்ணீரும் கூவம்,அடையாறு கால்வாய்களில் திருப்பிவிடப்பட்டது.

Egmore
எழும்பூர்

ஆனால், இவ்வளவு நீரைத் தாங்காத ஆடையாறுஸ கூவம் ஆறுகள் ஆங்காங்கே உடைப்பெடுத்து நீரை சென்னை நகருக்குள்கொண்டு வந்துவிட்டன. இதனால் நகரை நாலாபுறமும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி, சூளைமேடு, அமைந்தகரை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர், சிந்தாரிப்பேட்டை,புதுப்பேட்டை, சென்டிரல், பல்லவன் சாலை வரையில் கூவம் நிரம்பியபடி கரையே தெரியாத அளவுக்கு வெள்ளம் ஓடியது.

Tambaram CTO Colony
தாம்பரம்- சிடிஓ காலனி

இதன் காரணமாக அடையாறு, கூவம் ஆற்றங்கரையோரம் உள்ள நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகள் பலவற்றில் வெள்ள நீர் புகுந்துபல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக மணப்பாக்கம், நந்தம்பாக்கம், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் உள்ளிட்டபகுதிகளில் பல ஆயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கின. வெள்ள நீரில் சிக்கிய மக்களை ராணுவத்தினரும், தீயணைப்புப்படையினரும் மீட்டு வேறு பகுதிகளுக்குக் கொண்டு சென்றனர்.

Mugapper
முகப்பேர் சாலைகளில் வெள்ளம்

தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 11,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.மேலும் மற்ற சிறிய ஏரிகளில் இருந்து வரும் தண்ணீரின் அளவும் குறைந்து விட்டது. இதனால் அடையாறு ஆறில் வெள்ளம்குறையத் தொடங்கியுள்ளது.

Vellacherry
வேளச்சேரி

வேலூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் ஏரியில் நிரம்பிய பாலாறு தண்ணீர் கல்லாறு வழியாக கேசவர் அணைக்கு வந்துநிரம்பியதால் கூவம் ஆற்றில் நேரடியாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் சென்னை நகருக்குள் கூவம் ஆற்றில் 13,113 கன அடிதண்ணீர் ஓடியது.

Nesapakkam
நெசப்பாக்கத்தில் பிளாஸ்டிக் கேன்கள் மூலம் வெளியேற்றப்படும் பெண்கள்

கேசவர் அணையில் இருந்து கூவம் ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் அடியோடு நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் கூவம்,அடையாற்றில் வெள்ளம் குறைந்து வருகிறது. அதையொட்டி பகுதிகளில் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது.

Kilpauk Canal Road
கீழ்ப்பாக்கம்

இதனால் பீதியில் இருந்த சென்னை நகர மக்கள் நிம்மதி அடைந்து வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.

Egmore
எழும்பூர்

அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு மாநகராட்சி சார்பில் தொடர்ந்து உணவு உள்ளிட்டஉதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் தண்ணீர் முற்றிலும் வடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X