For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேதாரண்யம் அருகே கரையை கடந்தது புயல்: வலுவிழந்ததால் சேதமில்லை- தப்பிய சென்னை

By Staff
Google Oneindia Tamil News

நாகப்பட்டனம்:


வேதாரண்யம் அருகே கரை கடந்த புயல் (இந்தியாவின் இன்சாட் செயற்கைக் கோள் எடுத்த படம்)

வங்கக் கடலில் உருவாகி தமிழக கடலோர மாவட்டங்களை கடுமையாக மிரட்டி வந்த ஃபனூஸ் புயல், வலுவிழந்துநாகப்பட்டிணம் மாவட்டம் வேதாரண்யம் அருகே இன்று காலை 11 மணிக்குக் கரையைக் கடந்தது.

அப்போது வேதாரண்யம், நாகை, வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் மிக பலத்த சூறைக் காற்று வீசியது.

வங்கக் கடலில் அந்தமானுக்கு அருகே உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம், படிப்படியாக வலுவடைந்த புயல் சின்னமாகமாறியது. இதற்கு ஃபனூஸ் என்று பெயரிடப்பட்டது. இந்தப் புயல் படிப்படியாக சென்னையை நோக்கி நகர்ந்து வந்தது.

ஆனால் திடீரென திசை மாறி நாகையை நோக்கி புயல் சின்னம் நகரத் தொடங்கியது. இந்த நிலையில் நாகைக்கும், தொண்டிக்கும்இடையே இன்று புயல் கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் இன்று பிற்பகல் புயல் சின்னம்வேதாரண்யம் அருகே நெருங்கியபோது வலுவிழந்தது.

வலுவிழந்ததால் சேதமில்லை:

இதையடுத்து வேதாரண்யம் அருகே புயல் கரையைக் கடந்தது. இதையடுத்து நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்டகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கன மழை பெய்து வருகிறது.

புயல் கரையைக் கடந்தபோது புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராமேஸ்வரம், விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சை,நாகப்பட்டிணம் ஆகிய பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திலும்லேசான மழை பெய்கிறது.

இதைத் தவிர தமிழகத்தின் உட்புற மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. புயல் கரை கடந்துவிட்டாலும் 2 நாட்களுக்குமழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வலுவிழந்த நிலையில் புயல் கரையைக் கடந்ததால் பெருமளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

தப்பியது சென்னை:

முன்னதாக சென்னை முதல் நாகை வரையிலான கடலோரப் பகுதி மக்கள் அதிகபட்ச உஷார் நிலையில் இருந்தனர். குறிப்பாகசென்னை மக்கள் மீண்டும் ஒரு பேய் மழையை சந்திக்கத் தயாராகினர். ஆனால், இந்தப் புயல் வேதாரண்யம் அருகே கரையைக்கடந்ததால் சென்னைக்கு புயல் ஆபத்து நீங்கிவிட்டது.

முன்னதாக சென்னைக்கும், நாகைக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஃபனூஸ் புயல் பின்னர் திசைமாறி நாகைக்கும், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கும் இடையே இன்று பிற்பகலில் கரையைக் கடக்கும் என வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்தது.


அமெரிக்க செயற்கைக் கோள் எடுத்த படம்

பீதியில் ஆழ்ந்த கடலூர்:

கடலூர், நாகையில் நேற்று இரவு முதலே கன மழை பெய்து வருகிறது. பலத்த சூறைக் காற்றும் வீசி வருகிறது. இரு மாவட்டநிர்வாகங்களும் ஆபத்தான பகுதிகளில் இருந்து மக்களை அப்புறப்படுத்தினர்.

கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம், அக்கரைப்பேட்டை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் அதிகபட்ச உஷார் நிலைஅறிவிக்கப்பட்டது. மாவட்டத்தின் 57 கிலோமீட்டர் தொலைவிலான கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள 51 கிராமங்களில்வசிப்போர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

பிற பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், மின்சார இணைப்புகளை தேவைப்பட்டால் துண்டித்துவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

21 இடங்களில் புயல் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு புயல் தாக்ககும் அபாயம் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்தமையங்களில் வைக்கப்பட்டனர். மேலும் 25 இடங்களில் உணவு சமைக்கும் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டன.

உஷார் நிலை:

பாதிக்கப்படும் மக்களுக்கு உடனுக்குடன் உணவு வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர 15மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

தீயணைப்புப் படையினர், மீட்புப் படையினர் உள்ளிட்ட சகல ஏற்பாடுகளையும் பக்காவாக செய்து வைத்து புயலை சமாளிக்ககாத்திருந்தது கலெக்டர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான மாவட்ட நிர்வாகம்.

புயல் திசை மாறி சென்று விட்டபோதிலும், சென்னை மக்கள் இன்னும் கன மழை பீதியிலிருந்து விலகவில்லை.முன்னெச்சரிக்கையுடன் தான் உள்ளனர்.

தயாரான நாகை மாவட்டம்:

முன்னதாக புயல் தாக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நாகை, கடலூர், புதுவையில் பெரும் பீதி நிலவியது. இன்று பிற்பகலில்அது நாகைக்கும், தொண்டிக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் நாகை மாவட்ட நிர்வாகம்முழு வீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.


நாகை துறைமுகத்தில் 5ம் எண் புயல் எச்சரிக்கைக் கொடி பறக்க விடப்பட்டது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும்காவல்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை இரவு முதல் நாகையில் சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திருமண மண்டபங்கள், புயல் நிவாரண மையங்கள், பள்ளிக கூடங்கள்ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலுக்கு அருகில் வசிக்கும் அனைத்து மக்களும் அங்கிருந்துவெளியேற்றப்பட்டனர்.

வேதாரண்யத்தை புயல் கடக்கும் என்ற நிலையில் அருகேயுள்ள கோடியக்கரையில் முகாமிட்டு நிலைமையை நேரடியாகக்கண்காணித்தார் நாகப்பட்டிணம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ராதாகிருஷ்ணன்.

கடல் கொந்தளிப்பு:

முன்னதாக புயல் நெருங்கி வந்தபோது நாகை மாவட்டத்தின் பல பகுதிகளில், குறிப்பாக வேதாரண்யத்தில் கடல் கொந்தளிப்புமிகக் கடுமையாக இருந்தது.

புஷ்பவனம், வானவன் மாதேவி உள்ளிட்ட பல கடற்பகுதிகளில் கடல் கொந்தளிப்பு காரணமாக நீர் கடற்கரை முழுவதையும்சேறும், சகதியுமாக மாற்றி விட்டது.

கோவில்பத்து, நாலுவேதபதி, பெரிய குத்தகை, வெள்ளப் பள்ளம், கோடியக்கரை, கொளித்தீவு, ஆறுகாட்டுத்துறை ஆகியபகுதிகளில் கடல் நீர் உட் புகுந்தது. வேதாரண்யம் பகுதியில் கடல் கொந்தளிப்பு கடுமையாக உள்ளது.

இந்தப் பகுதி கிராமங்களில் வசித்து வருவோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர். அங்கு காவல்துறையினர்,தீயணைப்புப் படையினர், மீட்புப் படையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.

சுனாமி தற்காலிக குடியிருப்புகளில் வசித்து வந்தவர்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இன்று கடலூர், நாகைமாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை விடப்பட்டது.

வேதாரண்யத்தில் நிலைமையை சமாளிக்க ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X