For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன செய்தார்கள் 40 எம்.பிக்கள்? விஜயகாந்த் கேள்வி

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

தமிழகம் மற்றும் புதுவை மழை, வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து நிவாரணத் தொகையைப் பெற்றுத் தருவதில்தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 40 எம்.பிக்களும் என்ன செய்தார்கள் என்று கேட்டுள்ளார் நடிகர் விஜயகாந்த்.

தேசிய முற்போக்குத் திராவிடர் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ள விஜயகாந்த், முதல் முறையாக காஞ்சிபுரத்தில்பிரமாண்ட பொதுக் கூட்டத்தை சனிக்கிழமை நடத்தினார். கொட்டும் மழையில் நடந்த இந்த பொதுக் கூட்டத்தில் விஜயகாந்த்பேசுகையில், கட்சி ஆரம்பித்த பின்னர் போராட்டம் எதையும் நடத்தவில்லையே என்று என்னிடம் பலர் கேட்டார்கள். எனக்குபோராட்டம் நடத்துவதில் உடன்பாடில்லை.

அது தேவையில்லாத அரசியல். போராட்டம் நடத்துவதே மக்களை ஏமாற்றுவதற்காகத்தான். சுனாமி நிதியை என்ன செய்தார்கள்என்று இப்போது சிலர் அரசியல் பேசுகிறார்கள். தமிழகமே வெள்ளத்தில் தத்தளிக்கும்போது அரசியல் பேசுவது எனக்குப்பிடிக்காது.

சுனாமி நிதி குறித்துப் பேசுபவர்கள், இப்போதைய மழை, வெள்ளத்திற்கு என்ன செய்தார்கள்? தமிழகத்திலும், புதுவையிலுமாக40 எம்.பிக்கள் உள்ளனர். இவர்கள் மழை, நிவாரணப் பணிகளுக்காக என்ன செய்தார்கள்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்என்பது கூடத் தெரியவில்லையே? காவிரி நீரைப் பெற்றுத் தர முடியவில்லையே என்ற வருத்தத்தில் வாழப்பாடி ராமமூர்த்திபதவியைத் தூக்கி எறிந்தார்.

அப்படி யாராவது ஒருத்தர் இங்கே உண்டா? இப்போது மத்திய அரசு நிதி வழங்குவதில் தாமதம் செய்வதைக் காரணம் காட்டியாராவது பதவியை தூக்கி எறிவார்களா? தனக்குத் தேவையான மந்திரி பதவி கிடைக்கவில்லை என்ற அல்ப காரணத்துக்காகஅமைச்சரவையிலேயே சேர மாட்டோம் என்று தீர்மானம் போட்டவர்கள் இப்போது மழை வெள்ளத்தால்பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்தார்கள்?

சுதந்திரம் வாங்கி 58 வருடங்கள் ஆகி விட்டது. இதுவரை மக்களுக்கு என்ன கிடைத்தது? தேர்தலின்போது மட்டும் மக்களைப்பார்க்க வருகிறார்கள் அரசியல்வாதிகள். ஓட்டு வாங்கிச் சென்ற பிறகு அவர்களைப் பார்க்க மக்கள் அலைய வேண்டியுள்ளது.

ஏன், வருடத்திற்கு 3 முறை ஊர் ஊராக சென்று மக்களை சந்திக்க அவர்களுக்கு என்ன கஷ்டம்? நல்ல சாலைகள் இல்லை,குடிநீருக்காக ஏங்கும் மக்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். சொந்த வீடு இல்லாமல் லட்சக்கணக்கானோர் தவிக்கின்றனர்.

சாப்பாட்டுக்கு வழியில்லாத ஏழைகள் ஒருபுறம், வேலைவாய்ப்பின்றித் தவிக்கும் இளைஞர்கள் மறுபுறம். இப்போதையமழையில் அத்தனை சாலைகளும் போய் விட்டன. சேதமடையாத ஒரே சாலை, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுஆரம்பிக்கப்பட்டு போடப்பட்ட தங்க நாற்கர சாலை மட்டுமே.

நான் லஞ்சத்தை ஒழிக்கப் போகிறேன் என்று கூறியவுடன் பலர் ஏளனம் பேசுகிறார்கள். இவரால் எப்படி முடியும் என்கிறார்கள்.நீங்கள் வாங்கிப் பழக்கப்பட்டவர்கள், கொடுத்துப் பழக்கப்பட்டவர்கள் அல்ல. அதனால்தான் நான் சொல்வது உங்களுக்குப்பிடிக்கவில்லை. ஆனால் மக்களோ கொடுத்துக் கஷ்டப்பட்டவர்கள்.

அதனால் அவர்களுக்கு நான் சொல்வது பிடித்திருக்கிறது. நான் நடித்து வெளியாகவுள்ள சுதேசி படம்தான் எனது கடைசிப் படம்.இனி நடிக்கும் எண்ணம் இல்லை. இப்படத்தில் விழிப்புணர்வுக் கருத்தை வைத்துள்ளேன்.

அரசியல்வாதிகளை சந்திக்கும் தைரியம், துணிச்சல் எனக்கு இல்லை என்கிறார்கள். நான் இப்போது சவாலாக கூறுகிறேன். 234தொகுதிகளிலும் நான் தனியாகத்தான் நிற்கப்போகிறேன். யாருடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை.

அதேபோல உங்களால் நிற்க முடியுமா? இந்தி படிக்காதே என்று சொல்லி சொல்லியே மக்களை முட்டாளாக்கி, தமிழகத்தைவிட்டு போக முடியாதபடி செய்து விட்டார்கள். ஆனால் அவர்கள் வீட்டுப் பிள்ளைகளை மட்டும் இந்தி படிக்க வைத்து இன்றுடெல்லிக்கு அனுப்பி மந்திரி பதவியையும் வாங்கிக் கொடுத்து அழகு பார்க்கிறார்கள்.

அவர்கள் இந்தி படித்து மந்திரி ஆவார்கள். நாம் மட்டும் மாடு மேய்க்க போக வேண்டும். எனவே அன்னை மொழியைக்காப்போம், அனைத்து மொழியையும் கற்போம். எனக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள்.

நிச்சயம் தமிழ்நாட்டை இந்தியாவின் சிறந்த மாநிலமாக மாற்றுவேன். லஞ்சம் இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன்.அடுத்தடுத்து உங்களை சந்திக்க வருவேன் என்று பேசினார் விஜயகாந்த். மாநாட்டில், கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டிராமச்சந்திரன், பொதுச் செயலாளர் ராமு வசந்தன் உள்ளிட்டோரும் பேசினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X