• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கார்த்திக்கை மிரட்டிய சசிகலா?

By Staff
|

சென்னை:

பல பிரிவுகளாக கிடக்கும் பார்வர்ட் பிளாக் கட்சிகளை ஒருங்கிணைத்து பலமுள்ள ஒரே கட்சியாக மாற்ற நடிகர் கார்த்திக்திட்டமிட்டுள்ளார்.

தனிக் கட்சி ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்த கார்த்திக் திடீரென பிஸ்வாஸ் தவைமையில் இயங்கும் அகில இந்திய பார்வர்ட் பிளாக்கட்சியில் சேரப் போவதாக அறிவித்துள்ளார்.

அதில் சேர சில நிபந்தனைகளை கார்த்திக் விதித்ததாகத் தெரிகிறது. அதன்படி தமிழக தலைமைப் பொறுப்பு (பொதுச் செயலாளர்)தனக்கு வழங்கப்பட வேண்டும், மேலிட உத்தரவு என்ற பெயரில் தன்னை அடிக்கடி தொல்லைப்படுத்தக் கூடாது, தமிழகவிவகாரம் குறித்து சுதந்திரமாக முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும், பிரிந்து கிடக்கும் பார்வர்ட் பிளாக் கட்சிகளைஇணைக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை கார்த்திக் முன் வைத்தார்.

அவை ஏற்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. தற்போது அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச்செயலாளராக சந்தானம் எம்.எல்.ஏ. உள்ளார். இவர் பார்வர்ட் பிளாக் கட்சிக்காரராகவே செயல்படுவதில்லை. மாறாக அதிமுகஎம்.எல்.ஏவைப் போலவே நடந்து வருகிறார். அந்த அளவுக்கு தீவிர ஜெயலலிதா ஆதரவாளர் சந்தானம்.

கார்த்திக்கிற்கு முக்குலத்தோர் இளைஞர்கள் மத்தியில் பெருவாரியான ஆதரவு காணப்படுவதால், அவரை வைத்து தமிழகத்தில்பார்வர்ட் பிளாக் கட்சியை பலப்படுத்த அகில இந்தியத் தலைமை முடிவு செய்துள்ளது.

இதற்காக சந்தானத்தை காவு கொடுக்கவும் கட்சி தயாராக உள்ளது. இதனால் அதிருப்தியடைந்துள்ள சந்தானம், கார்த்திக்கிற்குபொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படக் கூடாது என்று பகிரங்கமாகக் கூறியுள்ளார். ஆனால், அதை மேலிடம்கண்டுகொள்ளவில்லை.

மாறாக, கார்த்திக்கிற்கு பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படும் என உறுதி அளித்து விட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் கார்த்திக் பேசுகையில்,

பார்வர்ட் பிளாக் கட்சியில் சேருவது ஏன் என்று சிலர் கேட்கிறார்கள். அதை விளக்க வேண்டியது எனது கடமை. சரணாலயம்அமைப்பை தொடங்கியபோது, ஏராளமான பெரியவர்கள், இளைஞர்கள், சரணாலயம் அமைப்பைச் சேர்ந்தவர்கள், எனதுரசிகர்கள் என்னைச் சந்தித்து நீச்சயம் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொண்டனர்.

உங்களுக்குப் பின்னால் ஒரு பெரிய சக்தியே உள்ளது. அதை நீங்கள் இன்னும் சரியாக உணரவில்லை என்று எடுத்துக் கூறினர்.அவர்களுடைய அன்பை என்னால் தட்ட முடியவில்லை. அதனால்தான் அரசியலில் ஈடுபட முடிவு செய்தேன்.

பார்வர்ட் பிளாக் கட்சியிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதன் தலைவர் பிஸ்வாஸை பெங்களூரில் சென்று சந்தித்தேன்.இதையடுத்தே கட்சியில் சேருவது குறித்து முடிவு செய்தேன். எனக்கு தமிழ் மாநில பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படும் எனத்தெரிகிறது.

பார்வர்ட் பிளாக் கட்சி கடந்த 1939ம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸினால் ஆரம்பிக்கப்பட்டு, பசும்பொன்முத்துராமலிங்கத் தேவரால் தமிழகத்தில் வளர்க்கப்பட்ட கட்சி. எனவேதான் அந்தக் கட்சியில் சேர முடிவு செய்தேன்.

பார்வர்ட் பிளாக் கட்சி தமிழகத்தில் சிதறுண்டு போய்க் கிடக்கிறது. இவற்றை எல்லாம் இணைத்து, ஒரே கட்சியாக, பலம் மிக்ககட்சியாக மாற்றுவதே எனது லட்சியம் என்றார் கார்த்திக்.

அதிமுகவில் சேராதது ஏன் என்று கேட்டபோது, தேவர் சமுதாயத்தினர் அதிகம் உள்ள கட்சியாக அதிமுக இருந்தாலும் அது பெரியகட்சியாயிற்றே என்று மழுப்பலாக பதிலளித்தார் கார்த்திக்.

தமிழகம் முழுவதும் உள்ள முக்குலத்தோர் சமூகத்தினரை பார்வர்ட் பிளாக் என்ற ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் மிகப்பெரிய முயற்சியில் கார்த்திக் ஈடுபடவுள்ளார். இதில் கார்த்திக் வென்றால் தென் தமிழகத்தில் பெரும் அரசியல் சக்தியாக பார்வர்ட்பிளாக் மாறலாம்.

இதற்கிடையே மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் மூலமாக கார்த்திக்கு சசிகலா மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அதிமுக ஆதரவு முக்குலத்தோர் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் எந்த செயலிலும் இறங்க வேண்டாம் என கார்த்திக்கைசசிகலா மிரட்டியதாகவும் அது குறித்து தன்னை ஆதரிக்கும் அச் சமூகத்தின் மூத்த தலைவர்களுடன் கார்த்திக் விவாதித்தாகவும்கூறப்படுகிறது.

கொல்கத்தா புறப்பட்டார்:

இந் நிலையில் கொல்கத்தாவில் நடைபெறும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காககார்த்திக் இன்று புறப்பட்டுச் சென்றார்.

மாநாட்டை முடித்து விட்டு தமிழகம் திரும்பும் அவர் மதுரை அல்லது நெல்லையில் பிரமாண்ட மாநாட்டை நடத்தி பார்வர்ட்பிளாக் கட்சியில் முறைப்படி இணையவுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் அதிமுக ஒரு பக்கம் திகிலில் உறைந்துள்ள நிலையில் நடக்கும் வேடிக்கையை கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்சமீபத்தில் அரசியலுக்கு வந்த கேப்டன் விஜய்காந்த்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X