கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு
சென்னை:
சேது சமுத்திரத் திட்டக் கழகம் மற்றும் சூயஸ் கால்வாய்த் திட்டக் கழகத்திற்கு இடையே இன்று சென்னையில் புதிய புரிந்துணர்வுஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கருணாநிதி முன்னிலை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து விசாரித்த போது, கருணாநிதிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருவது தெரிய வந்தது. இதை மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர்டி.ஆர்.பாலுவும், உறுதிப்படுத்தினார்.
ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவரால் இயலவில்லை. அதற்குப் பதில் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார் என்று கூறி வாழ்த்துச்செய்தியை வாசித்தார்.
| ||||
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |