இலங்கை மாணவி கொலை: மாணவர் விடுதலை
மதுரை:
![]() |
இலங்கை மாணவி மயூரணி கொலை செய்ப்பட்ட வழக்கில் 24 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மாணவர் பாலபிரசன்னாவை விடுதலை செய்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரது மகள் மயூரணி மதுரையில் உள்ள அம்பிகா கல்லூரியில் படித்து வந்தார். அந்தக்கல்லூரியின் உரிமையாளரான சோலமலைத் தேவரின் வீட்டில் அவர் தங்கியிருந்தார்.
இந் நிலையில் வீட்டுக்குள் மயூரணி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுதொடர்பாக சோலமலைத்தேவர், அவரது மனைவி, மற்றொரு இலங்கை மாணவர் பாலபிரசன்னா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மாயூரணிக்கு சோலைமலைத் தேவர் செக்ஸ் டார்ச்சர் தந்து வந்ததாகவும், பாலபிரசன்னாவை விட்டு மயூரணியைக் கொலையைசெய்யச் சொன்னதே தேவர் தான் என்றும் புகார் எழுந்தது. முதலில் தேவர் மீதும், அவரது வீட்டு வேலையாட்கள் மீதும் கைதுநடவடிக்கை எடுத்த காவல்துறை பின்னர் தேவரைக் காப்பாற்றும் வேலையில் இறங்கியதாகக் கூறப்பட்டது.
இந் நிலையில் இந்த கொலை வழக்கு விசாரணை மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம் பாலபிரசன்னாவைத் தவிர மற்ற அனைவரையும் விடுதலை செய்தது. பால பிரசன்னாவுக்கு 24 ஆண்டு சிறைத் தண்டனைவிதிக்கப்பட்டது.
![]() |
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் உண்மையை மறைக்கவும், உண்மைக் குற்றவாளிகளைத் தப்ப வைக்கவும் காவல்துறைமுயல்வதாகக் கூறி மாயூரணியின் மாமா மோகன்தாஸ் வழக்குத் தொடர்ந்தார். விசாரணையை சிபிஐக்கு மாற்றவும் மோகன்தாஸ்கோரியிருந்தார்.
அதே போல தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பால பிரசன்னா மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மேல் முறையீடுசெய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மிஸ்ரா, ராமலிங்கம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று பரபரப்புத் தீர்ப்பைஅளித்தது.
பால பிரசன்னாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்வதாக நீதிபதிகள் தங்களது தீர்ப்பில்தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?














Click it and Unblock the Notifications