For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அஷ்டாவதானி நடிகை பானுமதி காலமானார்: இன்று உடல் தகனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Banumathiநடிப்பு, பாடல், இயக்கம், தயாரிப்பு என பல துறைகளில் கொடி கட்டிப் பறந்த பழம்பெரும் நடிகை பானுமதி சென்னையில்காலமானார்.

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் முடி சூடா ராணியாக திகழ்ந்தவர் பானுமதி. அந்தக்கால சூப்பர் ஸ்டார்களானஎம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, பின்னர் வந்த எம்.ஜி.ஆர், சிவாஜி என ஜாம்பவான்களுடன் இணைந்து பலபடங்களில் நடித்தவர் பானுமதி.

தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ் ஆகியோருடனும் நடித்தவர் பானுமதி. அவர்நடித்த படங்களில் அவரே பாட்டுக்களைப் பாடுவார்.

அவருக்கு எந்தப் பாடகியும் பின்னணி பாடியதில்லை என்ற சிறப்புப் பெற்றவர். இதுதவிர பல படங்களை தயாரித்துள்ளார்,இயக்கியுள்ளார். இப்படிப் பல துறைகளில் கொடி கட்டிப் பறந்த பானுமதியை அஷ்டாவதானி என்றே திரையுலகம் கூறியது.

80 வயதான பானுமதி சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் வசித்துவந்தார். அவருக்கு ஒரே மகன், டாக்டர் பரணி. இவரது பெயரில் சாலிகிராமத்தில் முன்பு இயங்கி வந்த பரணி ஸ்டுடியோவைமருத்துவமனையாக மாற்றி அந்த மருத்துவமனையை நிர்வகித்து வந்தார் பரணி.

கடந்த சில நாட்களாகவே பானுமதியின் உடல் நிலை மோசமடைந்தது. உடல் நலம் மோசமடைந்த நிலையில் சனிக்கிழமைநள்ளிரவில் பானுமதியின் உயிர் பிரிந்தது.

பானுமதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் நடிகர்,நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பானுமதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அவரது உடல் இன்று பிற்பகல் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. இந்த ஊர்வலத்தில் கலை உலக பிரமுகர்கள் கல்ந்துகொள்கிறார்கள். இன்று மாலை பெசட்நகரில் உள்ள சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

100க்கும் மேற்பட்ட படங்களில் பானுமதி நடித்துள்ளார். பத்மஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.தமிழ்நாடு இசைக் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X