• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எஸ்கேப் அரசியல்வாதிகள்: முழிக்கும் போலீஸ்

By Staff
|

சென்னை:

தமிழகத்தின் முக்கியமான மூன்று அரசியல்வாதிகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவதால்,அவர்களைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சென்னை போலீஸார் பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர்தான் அந்த புரட்சி தலைவர்கள்.

கராத்தே...

சென்னை மாநகரில் விளம்பர பலகைகள் வைப்பதில் நடந்த முறைகேடுகள், அரசு நிலத்தை ஆக்கிரமித்தது உள்ளிட்ட பல்வேறுபுகார்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் மாநகராட்சி ஆணையர் விஜயக்குமார் மற்றும் முதல்வருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக கராத்தே தியாகராஜன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து கராத்தே தலைமறைவாகி விட்டார். சென்னையை விட்டு வெளியேறிய கராத்தே முதலில் டெல்லியில்பதுங்கியிருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து அங்கு போலீஸ் படை விரைந்தது. ஆனால் டெல்லியிலிருந்து நழுவிய கராத்தேபின்னர் சிங்கப்பூருக்கும், பின்னர் நேபாளத்துக்கும் பறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந் நிலையில் அவரது தாயார் சொந்த ஊரில் மரணமடைந்தார். எனவே எப்படியும் தாயாரின் இறுதிச் சடங்குக்கு கராத்தேவருவார் என்று போலீஸார் எதிர்பார்த்தனர். ஆனால் போலீஸாருக்கு பெப்பே கொடுத்து விட்டார் கராத்தே. இதனால்கராத்தேயைப் பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டுள்ளனர் போலீஸார். கிட்டத்தட்ட 3 மாதங்களாக கராத்தே தலைமறைவாகஉள்ளார்.

அவர் ஜெயேந்திரரின் உதவியோடு நேபாள மன்னரின் ஆதரவைப் பெற்று அந்த நாட்டில் பதுங்கியுள்ளதாக இப்போதுகருதப்படுகிறது.

டாக்டர்...

சென்னை அருகே திரிசூலம் பகுதியில் கல் குவாரியில் வேலை பார்த்து வந்தவர் மாடசாமி என்ற இளைஞர். நெல்லைமாவட்டத்தைச் சேர்ந்தவரான இவர் புதிய தமிழகம் கட்சியில் தொண்டராக இருந்தார். கட்சி உடைந்து புதிதாகப் பிறந்த மக்கள்புதிய தமிழகம் கட்சியில் இவர் சேர்ந்தார். இதனால் புதிய தமிழகம் கட்சியைச் சர்ந்தவர்களுக்கும், மாடசாமிக்கும் இடையேமோதல் மூண்டது.

இந் நிலையில் மாடசாமி சிலரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமியின் தூண்டுதலால்தான் நடைபெற்றது என்று குற்றச்சாட்டு கிளம்பியது. இதையடுத்து பல்லாவரம் போலீஸார்கிருஷ்ணசாமி மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து கிருஷ்ணசாமி தலைமறைவானார். அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துதவிட்டது. எனவே கிருஷ்ணசாமியைக் கைது செய்ய போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இதுவரைகிருஷ்ணசாமி எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. கிட்டத்தட் 1 மாதமாக கிருஷ்ணசாமி எஸ்கேப் ஆனபடி உள்ளார்.

கல்விமான்...

மூன்றாவது அரசியல்வாதி ஏ.சி.சண்முகம். எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுக எம்.பியாக இருந்தவர் ஏ.சி.சண்முகம். முதலியார்சமூகத்தைச் சேர்ந்த இவர், அந்த போர்வையைப் போர்த்திக் கொண்டு புதிய நீதிக் கட்சி என்ற ஜாதிக் கட்சியை கடந்த சட்டசபைத்தேர்தலின்போது ஆரம்பித்தார்.

அரசியல்வாதியாக வலம் வர ஆரம்பித்த இவருக்கு சொந்த ஊரான ஆரணி, வேலூர் மற்றும் சென்னையில் ஏராளமான கல்விநிறுவனங்கள் உள்ளன. இதில் சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின்பெரும்பாலான கட்டடங்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து, கூவம் ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளன.

மழை, வெள்ளத்தால், சென்னை நகரம் பெரும் பாதிப்புக்கு ஆளானதற்கு கூவம் ஆற்றில் தண்ணீர் சரிவர போகாததால்தான் என்றுகண்டுபிடிக்கப்பட்டது. இதற்குக் காரணம் ஆற்றின் இருபுறம் உள்ள ஆக்கிரமிப்புகள் என்பதை அறிந்த அதிகாரிகள் அவற்றைஅப்புறப்படுத்தி வருகின்றனர்.

அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஏ.சி.சண்முகத்தின் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கட்டடங்களும் இடிபடும் சூழ்நிலைஏற்பட்டுள்ளது. அரசு நிலத்தை ஆக்கிரமித்தது, பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காதது, கல்விக்கட்டணத்தைத் திருப்பிக் கேட்ட மாணவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியது உள்ளிட்ட 4 வழக்குகள் ஏ.சி.சண்முகம் மீதுபோடப்பட்டுள்ளது.

இதில் ஒரு வழக்கில் ஏ.சி.சண்முகத்திற்கு முன் ஜாமீன் கிடைத்துள்ளது. ஆனால் தலைமறைவாக உள்ள ஏ.சி.சண்முகம்உயர்நீதிமன்ற ஆணைப்படி, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், சரணடைய முடியாமல் தவிக்கிறார்.

காரணம், சரணடைய வந்தால், மற்ற 3 வழக்குகளில் போலீஸார் தன்னை உள்ளே தள்ளி விடுவார்கள் என்ற பயம்தான்.கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கும் மேலாக ஏ.சி.சண்முகம் தலைமறைவாக உள்ளார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X