For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக: ஒரே நாளில் 1000 விண்ணப்பங்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்குவிந்துள்ளன.

தமிழகம், புதுவை மற்றும் கேரள மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் பிப்ரவரி 1ம் தேதி முதல்விண்ணப்பிக்கலாம் என கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி புதன்கிழமை விண்ணப்பங்களைப் பெறும் பணி அதிமுக தலைமைக் கழகத்தில் தொடங்கியது. முதல்வர் ஜெயலலிதாஇதைத் தொடங்கி வைத்தார். முதல்வர் ஜெயலலிதா பல்வேறு தொகுதிகளில் போட்டியிடக் கோரி முன்னாள் சபாநாயகர்காளிமுத்து, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர்.

ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதா சார்பில் பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்தார். சோழவந்தான் தொகுதியில்போட்டியிடக் கோரி காளிமுத்துவும், அரியலூரில் போட்டியிடக் கோரி துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம், சென்னைராயபுரம், துறைமுகம், ஆர்.கே.நகர், பூங்காநகர் ஆகிய ஏதாவது ஒன்றில் போட்டியிடக் கோரி ஜெயக்குமாரும், விளாத்திகுளம்,கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், சாத்தான்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் போட்டியிடக் கோரிஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் மனு தாக்கல் செய்தனர்.

இதே போல, பேரூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, கிணத்துக்கடவு, பொங்கலூர் தொகுதிகளில் ஜெயலலிதாவுக்காகஅமைச்சர் தாமோதரன், வேலூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடக் கோரி அமைச்சர் பாண்டுரங்கன், கோபி,பவானிசாகர், சத்தியமங்கலம், பெருந்துரை, பவானி ஆகிய தொகுதிகளில் போட்டியிடக் கோரி கே.ஏ.செங்கோட்டையன்ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர்.

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடக் கோரி முன்னாள் எம்.எல்.ஏ. சைதை துரைசாமி மனு தாக்கல் செய்தார்.ஜெயலலிதா போட்டியிடக் கோரி மட்டும் 500 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இது தவிர பல்வேறு அதிமுக பிரமுகர்கள் தங்களுக்கு சீட் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தனர். ஒரே நாளில் கிட்டத்தட்ட1000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக அதிமுக தலைமைக் கழக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாழக்கிழமை முதல் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வருகிற 15ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விஜயகாந்த் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடவிரும்புவோரிடமிருந்து இன்று முதல் விண்ணப்பங்கள பெறப்படவுள்ளன.

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆண்டாள் அழகர் திருமண மண்டப வளாகத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில்விண்ணப்பங்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தொகுதிகளுக்கு போட்டியிட விரும்புவோர் ரூ. 10,000 கட்டியும், தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.5000 கட்டியும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ரூ 2000செலுத்த வேண்டும். வருகிற 24ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X