For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜய்காந்த் கட்சியில் பெரும் பூசல்: பயணம் ரத்து

By Staff
Google Oneindia Tamil News

குடியாத்தம்:

விஜய்காந்தின் தே.மு.தி.கவில் கோஷ்டிப் பூசல் வெடித்துள்ளது. அவரது மாமியார் ஊரான குடியாத்தம் இந்தப் பூசலுக்குபிள்ளையார் சுழி போட்டுள்ளது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தனியாகப் போட்டியிடுவதாகக் கூறி பிரச்சாரம் செய்து வரும் விஜய்காந்த், திமுகவை நேரடியாகத்தாக்குவதோடு, அதிமுகவை மறைமுகமாக ஆதரித்து வருகிறார்.

அவரது கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வாங்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் விஜய்காந்த் ரசிகர் மன்ற மாஜி மாவட்டத் தலைவர் சேகருக்கும், இப்போதைய தலைவர்வேலுவுக்கும் மோதல் வெடித்துள்ளது.

இரு தரப்பினரும் தனி கோஷ்டியாக செயல்பட்டு வருவதோடு இப்போது மோதலிலும் ஈடுபட்டுள்ளனர்.

மதுரைக்கு அடுத்தபடியாக விஜய்காந்துக்கு அதிகபட்ச ரசிகர் மன்றங்கள் வேலூரில் தான் உள்ளன. தனது பெல்டில்விஜய்காந்துக்கு ரசிகர்கள் மன்றங்கள் பெருகியதால் தான் அவர் மீது தாக்குதலை ஆரம்பித்தது பாமக.

பாமகவை மிகக் கடுமையாக எதிர்க்க இந்த மாவட்டத்தில் உள்ள ரசிகர் மன்றங்களை பெரிதும் நம்பியுள்ளார் விஜய்காந்த். இந்நிலையில் சேகர், வேலு மோதல் வெடித்து மன்றங்களே இரண்டாக உடைந்து தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றன.

பதவி பறிக்கப்பட்ட சேகர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். கட்சி ஆரம்பித்ததில் இருந்தே தனது ஜாதியினருக்கேவிஜய்காந்த் முக்கியத்துவம் தர ஆரம்பித்துவிட்டதாக பிற ஜாதி மன்ற நிர்வாகிகள் பலர் ஆங்காங்கே போர்க் கொடி தூக்கியதுநினைவுகூறத்தக்கது.

தனது பதவிப் பறிப்புக்கு விஜய்காந்தின் மாமியார் குடும்பமும் ஒரு காரணம் என சேகர் நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், விஜய்காந்த் வேலூர் வரும்போது அவரை வரவேற்க ஒவ்வொரு மன்றமும் ரூ. 3,000 தர வேண்டும் எனஉத்தரவிடுகின்றனர். (கூட்டம் சேர்க்க, பிரியாணி ஏற்பாடு செய்ய, தோரணம் கட்ட, மற்றும் இத்யாதி செலவுகளுக்கு).

இதை எங்கே போய் வசூலிப்பது. இது தொடர்பாக தலைமையிடம் முறையிட்டதால் எங்கள் மீதே நடவடிக்கை எடுத்துள்ளனர்என்றார்.

ரசிகர் மன்றத்தினர் இடையே ஏற்பட்டுள்ள இந்த (ஜாதி) மோதலையடுத்து விஜயகாந்த் தனது வட மாவட்ட சுற்றுப் பயணத்தைதிடீரென ரத்து செய்துள்ளார்.

அதற்குப் பதிலாக அதே நாட்களில் தென் மாவட்டங்களில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் ராமு வசந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விஜயகாந்த் மார்ச் 1ம் தேதிமுதல் வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவையில்சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்யவிருந்தார்.

தற்போது இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக மார்ச் 3,4 ஆகிய நாட்களில் தூத்துக்குடிமாவட்டத்திலும், 6,7,8 ஆகிய மூன்று நாட்கள் நெல்லை மாவட்டத்திலும், 10ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலும், 12,13,14ஆகிய நாட்கள் மதுரை மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.

ரத்து செய்யப்பட்ட மாவட்டங்களுக்கான பிரசார தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என ராமு கூறியுள்ளார். ஆனால், வடமாவட்ட சுற்றுப்பயணத்தை விஜயகாந்த் ரத்து செய்தது ஏன் என்ற காரணத்தை ராமு விளக்கவில்லை.

இதற்கிடையே வட மாவட்டங்களில் அதிமுகவினரின் பொதுக் கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பாமகவினர் குறுக்கிட்டு ரகளை செய்யஆரம்பித்துள்ளனர்.

ஆளுங்கட்சிக்கே பாமகவினரால் இடையூறு ஏற்பட்டு வரும் நிலையில், தனது மன்றங்களில் கோஷ்டிப் பூசல் நிலவுவதால், தனதுகூட்டங்களுக்கும் பாமகவால் பிரச்சனை ஏற்படுவதை சமாளிப்பது இப்போதைக்கு கஷ்டம் என்பதால் வட மாவட்டசுற்றுப்பயணத்தை விஜயகாந்த் ரத்து செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X