For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூட்டணி: மதிமுகவுக்கு பிரகாபரன் உத்தரவு-சுவாமி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சட்டசபைக்கே போகாமல் அறிக்கை மேல் அறிக்கையாக விட்டுக் கொண்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு சட்டசபைத்தேர்தலில் போட்டியிட தார்மீக உரிமையே கிடையாது என்று ஜனதாக் கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுவாமி, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒருமுறை கூட சட்டசபை விவாதத்தில்கருணாநிதி கலந்து கொண்டதில்லை. சட்டசபைக்கே அவர் போவதில்லை. வெறுமனே கையெழுத்தை மட்டும் போட்டு விட்டுபோய் விடுவார். இப்படிப்பட்ட பொறுப்பான தலைவரான அவர், வருகிற தேர்தலில் நிற்க தார்மீக அடிப்படையில் என்னஉரிமை இருக்கிறது?

மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார். அவரை முதலில் அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர்மன்மோகன் சிங் நீக்க வேண்டும்.

திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, பாமக போன்ற கட்சிகள் அக்கூட்டணியை விட்டு விலகக் கூடாது என்று பிரபாகரன்உத்தரவிட்டுள்ளார். எனவே அந்தக் கூட்டணி அவ்வளவு சீக்கிரம் உடையாது. எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும் வேறுவழியின்றி வாங்கிக் கொண்டு அங்கேயே இருந்து விடும்.

இப்போதுள்ள மத்திய அரசு விரைவில் கவிழும், விரைவில் மாற்று அரசு அமையும். கர்நாடக அரசியல் மாற்றம் அதற்கானமுன்னோட்டம்தான்.

மக்களுக்கு திமுகவும் எதுவும் செய்யவில்லை, அதிமுகவும் எதுவும் செய்யவில்லை. இரு கட்சிகளுமே இந்து விரோதகட்சிகள்தான்.

ஜெயேந்திரர் கைது நாட்டுக்கே அவமானம். இந்து மத அமைப்புகளை ஒருங்கிணைத்து, திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக புதியஅணியை நான் ஏற்படுத்துவேன். இந்தக் கூட்டணியில் பாஜகவும் இருக்கும். சங்கராச்சாரியாரைக் கைது செய்ததன் மூலம்தமிழகத்தில் இந்து மதத்துக்கு ஆபத்து வந்துவிட்டது. இதனால் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யப்போகிறேன்.

நடிகர் விஜய்காந்த் கட்சி ஆரம்பித்துள்ளார். தேர்தல் வரட்டும் பார்ப்போம் என்கிறார். தனித்து நிற்பேன் என்கிறார். அவர் எங்கேநிற்கிறார் என்று அவருக்கே தெரியாது. சினிமாவில் கூத்தாடுகிற விஜய்காந்த் முதல்வர் ஆவேன் என்று வசனம் பேசுகிறார்.

இவருக்கு அரசியல் தகுதியும் கிடையாது, அனுபவமும் கிடையாது. விஜய்காந்தைப் பற்றி மேற்கொண்டு பேசுவதே வேஸ்ட்என்றார் சுவாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X