For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நன்றி மறப்பது நன்றன்று: திமுக கூட்டணியில் தொடருவேன் - வைகோ அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக கூட்டணியை வலுப்படுத்தவும், வெற்றியை உறுதி செய்யவும் உறுதி பூண்டுள்ள மதிமுக, திமுககூட்டணியில்தான் நீடிக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்குமா என்பது குறித்து நிலவி வந்த சர்ச்சைகளுக்கு முடிவு கட்டும் விதமாகவிரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும் என திட்டவட்டமாகதெரிவித்துள்ளார்.

வைகோவின் அறிக்கை: திமுக தலைவர் கருணாநிதி குறித்தும், திமுக குறித்தும் மதிமுக கொள்கை விளக்க அணிச்செயலாளர் நாஞ்சில் சம்பத், கூறிய கருத்துக்கள் இயக்கத்துக்கு உடன்பாடானவை அல்ல என்றும், கருணாநிதிமனம் புண்படும்படியாக அவர் சொன்ன கருத்துக்கள் பற்றி நான் வருந்த நேரிட்டதையும், இதுகுறித்து அவரிடம்உரிய விளக்கம் கேட்கப்படும் என்றும் அறிவித்த பின்னரும்;

நாஞ்சில் சம்பத், திமுக தலைமையையும், திமுகவையும் நிந்திக்கும் விதத்தில் பத்திரிகைகளில் பேட்டி கொடுத்ததுமட்டும் அன்றி, தான் கூறிய கருத்துக்கள் பற்றி வருந்துவதற்கு அவசியம் இல்லை என்று செய்தியாளர்களிடம்தெரிவித்ததும் கூட்டணி தர்மத்துக்கு முற்றிலும் முரண்பாடானதும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் செயலும்ஆகும்.

திமுக தலைவரும், அவ்வியக்கத் தோழர்களும் மனம் காயப்படும் விதத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்காகவருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் எமது இயக்கம் வலுவுடன் வளர்ச்சி பெற்று இருக்கிறது என்றுதான்கூறியதாகவும், வேறு கட்சிகளைப் புண்படுத்தும் விதத்தில் பத்திரிக்கைகளில் வெளியான சொற்களைப்பயன்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான கூட்டமியில்தான் மதிமுக அங்கம் வகிக்கிறது என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில்தான்அண்மையில் கடந்த 14ம் தேதி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக தலைவர் கருணாநிதி கூட்டியகூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் கடந்த 8ம் தேதியன்று மதிமுக பங்கேற்றது என்பதை சுட்டிக் காட்டி அந்தக்கூட்டணியிலேயே தொடருகிறோம் என்று நான் தெரிவித்துள்ளேன்.

கடந்த மாதம் ஜனவரி 26ம் தேதி கருணாநிதியை சந்தித்து 1 மணி நேரம் உரையாடியதையும் மதிமுக போட்டியிடும்தொகுதிகள் குறித்துப் பேசியதையும் கருணாநிதி 18ம் தேதியன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

எனவே தொகுதிப் பங்கீடு குறித்து பூர்வாங்கமாகப் பேசி விட்ட நிலையில், மதிமுக போட்டியிட விரும்பும்தொகுதிகள் குறித்த பட்டியலை தயார் செய்வதற்காக தலைமை நிர்வாகிகளோடும், மாவட்ட செயலாளர்களோடும்ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.

ஏற்கனவே இதுகுறித்து பூர்வாங்கமாகப் பேசி இருக்கிறோம் என்பதால் பட்டியலைத் தர இன்னும் ஓரிரு நாள்அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணி இருந்த நிலையில், 17ம் தேதி மாலை எனது சொந்த ஊரானகலிங்கப்பட்டியில் நான் படித்த பள்ளியில் பொன் விழா நிகழ்ச்சியில் பேசும்போது கூட கலிங்கப்பட்டி உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளி என்ற உயர்வு பெற உத்தரவிட்டவர் அன்றைய முதல்வர் கலைஞர் என்பதைக்கூறியதோடு,

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி அவருக்கு நன்றி தெரிவித்துப் பேசியது 18ம் தேதிகாலை பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளது. இந்தச் சூழ்நிலையில், 18ம் தேதியன்று மதிமுக கூட்டணியில்நீடிக்கிறதா என்ற கேள்வி சர்ச்சைக்குள்ளானது குறித்து வேதனைப்படுகிறேன்.

கூட்டணியின் மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற விதத்தில் மறுமலர்ச்சி திமுக எந்த செயலிலும் ஈடுபட்டதுஇல்லை. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்த இடங்கள் ஒதுக்கப்படாத நிலையிலும் கூடஇதயசுத்தியோடு, 40 தொகுதிகளிலும் கூட்டணி வெற்றிக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு முழு மூச்சாக உழைத்துப்பாடுபட்டது நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

அரசியல் நாணயத்தையும், நாகரீகத்தையும் கட்டிக் காக்கும் உன்னதமான குறிக்கோளோடு கடந்த 12ஆண்டுகளாக இயங்கி வருகின்ற மதிமுக இந்த அரசியல் பண்பாட்டை பாதுகாக்கக் கொடுத்து இருக்கின்ற விலைஅதிகமாகும்.

இதற்காக ஏற்றுக் கொண்ட துன்ப துயரங்கள் ஏராளம். அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை,இலட்சியத்தில் உறுதி என்ற தாரக மந்திரத்தை, நிலை நாட்டவும், செயல்படுத்தவும் குறுகிய தற்காலிக லாபங்களைகருதாமல், நாடாமல், தமிழகத்தின் உயர்வையும், திராவிட இயக்கத்தின் நலனையும் உயிராகக் கருதி இயங்கிவருகிறோம்.

கடந்த 2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக கூட்டணியை விட்டு விலகிச் செல்ல வேண்டியநிலைமை ஏற்பட்டபோதும் கூட, சட்டமன்றத்தில் சில இடங்கள் கிடைத்தால் போதும் என்று கருதி இன்னொருகூட்டணியில் இடம் பெற எண்ணிடவும் இல்லை என்பதை சுட்டிக் காட்டுவது அவசியம் ஆகும்.

அரசியல் நாணயத்தையும், அரசியல் நாகரீகத்தையும் இரு கண்களாகப் போற்றுகின்ற இயக்கம்தான் மதிமுகஎன்பதை கடந்த 17 ஆண்டுகளின் செயல்பாடுகள் திட்டவட்டமாக விளக்கக் கூடியவை ஆகும்.

பொது வாழ்வைப் பாழ்படுத்தும் அரசியல் வர்த்தக சூதாட்டத்தை அறவே அகற்றுவதே எங்கள் நோக்கம்.ஒளிவுமறைவின்றி எடுக்கின்ற முடிவுகளைச் செயல்படுத்தும் திறந்த புத்தமாகவே மதிமுக திகழ்கிறது. திமுகதலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் மதிமுக அக்கூட்டணியை வலுப்படுத்தவும், தேர்தல்களத்தில் கூட்டணியை வெற்றி பெறச் செய்யவும் உறுதி பூண்டு இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்என்று கூறியுள்ளார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X