For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதியை சந்தித்தார் வைகோ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மாலை அவரது இல்லத்தில் சந்தித்துப்பேசினார்.

திமுக கூட்டணியில் வைகோ நீடிப்பாரா, மாட்டாரா என்ற பெரும் குழப்பம் நிலவி வந்த நிலையில், திமுகஅணியில்தான் மதிமுக நீடிக்கும் எனக் கூறி சர்ச்சைகளுக்கும், குழப்பங்களுக்கும், தவிப்புகளுக்கும் முற்றுப்புள்ளிவைத்து, திமுக கூட்டணியினரின் வயிற்றில் பால் வார்த்தார் வைகோ.

வைகோவின் அறிவிப்பையடுத்து அதிமுக தரப்பு படு சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அதேசமயம், திமுக தரப்பு பெரும்உற்சாகத்தில் மூழ்கியுள்ளது.

இந் நிலையில் சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்குச் சென்றிருந்த வைகோ 2 நாட்களுக்கு முன்பு சென்னைதிரும்பினார்.

இன்று மாலை கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் வைகோ சந்தித்தார். தொகுதிப் பங்கீடு, தேர்தல்பிரசார உத்திகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து கருணாநிதியும், வைகோவும்ஆலோசனை நடத்தினர்.

தாங்கள் விரும்பும் தொகுதிகளின் பட்டியலை கருணாநிதியிடம் வைகோ கொடுத்ததாகத் தெரிகிறது. மதிமுகதனக்கு 35 இடங்கள் கேட்கும் நிலையில் அவர்களுக்கு 20 முதல் 23 இடங்கள் வரை திமுக அளிக்கும் என்றுதெரிகிறது.

பாமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஏற்கனவேபட்டியலைக் கொடுத்து விட்டன. காங்கிரஸ் மட்டுமே பட்டியல் கொடுக்க வேண்டியுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

காத்திருந்து காத்திருந்து...

இதற்கிடையே இன்று காலை முதலே கருணாநிதி-வைகோ சந்திப்பு இதோ நடக்கப் போகிறது, அதோ நடக்கப்போகிறது என்று பெரும் குழப்பம் நிலவியது.

இருவரும் இன்று காலை 11.30 மணியளவில் சந்திக்கலாம் என்ற எதிர்பார்க்கப்பட்டது. தமிழ், இந்தி, ஆங்கிலம்உள்ளிட்ட பல்வேறு பத்திரக்கைகள், டிவிக்கள், இணையத் தளங்களின் நிருபர்களும் புகைப்படக்காரர்களும்பெரும் கூட்டமாகக் கூடிவிட்டனர்.

ஆனால், திருச்சி சென்றிருந்த கருணாநிதி அங்கிருந்து 1 2.40 மணிக்குத்தான் சென்னைக்கே கிளம்பினார். இதனால்வைகோ வரவில்லை. கருணாநிதியும் விமான நிலையத்திலிருந்து நேராக தனது வீட்டுக்குபோய் விட்டார்.அறிவாலயம் வரவில்லை.

ஒரு வேளை கோபாலபுரம் இல்லத்தில் இருவரும் சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதால் அங்கும்செய்தியாளர்கள் படை விரைந்தது. ஆனால் அங்கும் வைகோ பிற்பகல் வரை வரவில்லை.

இதையடுத்து மாலையில் தான் சந்திப்பு என்று கூறப்பட்டது. ஆனால், எங்கே என்று தெரியாததால் அறிவாலயம்மற்றும் கோபாலபுரம் ஆகிய இரு இடங்களிலும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் படை வழி மேல் விழிவைத்துக் காத்திருந்தனர்.

இதற்கிடையே, கருணாநிதியிடம் பேசுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குழுவினரும் அறிவாலயம்வந்து, கருணாநிதி இல்லாததால் ஏமாற்றமடைந்து திரும்பினர். மாலையில் வீட்டிற்குப் போய் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

கருணாநிதி அளவில்லா மகிழ்ச்சி:

முன்னதாக, திமுக கூட்டணியில்தான் மதிமுக நீடிக்கும் என வைகோ அறிவித்துள்ளது அளவில்லாத மகிழ்ச்சியைஏற்படுத்தியுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

திருச்சி திமுக மாநில மாநாடு தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில், மாநாட்டு தொடர்பான பணிகளைபார்வையிட திருச்சி கிளம்புவதற்கு முன்பு, நான் ஓரளவு மகிழ்ச்சியுடன்தான் இருந்தேன். ஆனால், திமுககூட்டணியில்தான் மதிமுக நீடிக்கும் என வைகோ வெளியிட்ட அறிக்கையால் எனது மகிழ்ச்சி அளவில்லாதமகிழ்ச்சியாக மாறியது.

திமுக மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டிட ஊக்கத்துடன் உழைக்கும் தொண்டர்களின் உழைப்பின்பலனை, தேர்தலில் வெற்றிக் கனியாக மாற்றிடுவோம்.

மாநாட்டு ஏற்பாடுகளில் காணப்படும் கரைபுரளும் உற்சாகம், மாநாடு வெற்றி பெறும் என்பதை மட்டும் எடுத்துக்காட்டவில்லை, மாறாக, மமதை பிடித்தவர்களின் பிடியிலிருந்து தமிழகம் விடுபடப் போகிறது என்றஎண்ணத்தையும்தான் என்று கூறியிருந்தார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X