1000 விக்கெட்-முரளீதரனுக்கு கருணாநிதி வாழ்த்து
திருச்சி:
ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 1,000 விக்கெட்டுகளை வீழ்த்திபுதிய உலக சாதனை படைத்த இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையாமுரளீதரனுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழரான முத்தையா முரளீதரன்,உலக கிரிக்கெட் அரங்கில் நட்சத்திர வீரராக விளங்குகிறார். டெஸ்ட் கிரிக்கெட்வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி முதன் முதலில் சாதனை படைத்தவர்முரளீதரன்.
இந் நிலையில், தற்போது புதிய உலக சாதனை ஒன்றை முரளீதரன் படைத்துள்ளார்.டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 1,000 விக்கெட்டுகளை வீழ்த்திபுதிய சாதனை படைத்துள்ளார்.
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முரளீதரன் இந்தச் சாதனையைநிகழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து முரளீதரனுக்கு வாழ்த்துத் தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதிகடிதம் அனுப்பியுள்ளார். கருணாநிதி பயங்கரமான கிரிக்கெட் பிரியர் என்பதுதெரிந்தது தானே..
அதிலும் முத்தையா மீது எப்போதும் தனி ஆர்வம் காட்டுபவர்.