For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாசன் கோஷ்டிக்கு 15, இளங்கோவனுக்கு 5..

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினர் கட்டணம் ஏதுமின்றிவிண்ணப்பங்களை கொடுக்கலாம் என்று அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமிதெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு48 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.தொகுதிகளை வாங்கி விட்ட காங்கிரஸ் அடுத்து அதற்குரிய வேட்பாளர்களை தேர்வுசெய்ய வேண்டிய மிகப் பெரிய ரகளைக்குத் தயாராகி வருகிறது.

அந்தக் கட்சியில் மொத்தம் 16 கோஷ்டிகள் உள்ளன. இதனால் கோஷ்டிக்கு 3 சீட்வீதம் சீட்டை ஒதுக்கினால் 48 சரியாகிவிடும் என்று ஒரு பார்முலாவைப் போட்டனர்கதர்ச் சட்டைகள்.

ஆனால், தாமக போன தடவை 23 இடங்களில் போட்டியிட்டதால் என் பங்காக 23சீட்களைக் கொடுத்துவிட வேண்டும் என்று டெல்லியில் போய் சென்னாராம் மத்தியஅமைச்சர் ஜி.கே.வாசன். இன்னும் தாமக-காங்கிரஸ்னு பிரிச்சுப் பார்த்துக்கிட்டேஇருக்காதீங்க, உங்களுக்கு 15 சீட் தந்துர்றோம். உங்க ஆளுங்களுக்குக்குடுத்துக்குங்க என்று சொல்லிவிட்டார்களாம்.

அதே போல மத்திய அமைச்சர் இளங்கோவன் தரப்பு தனது பங்காக 10 சீட் கேட்கஅவருக்கு 5 இடங்களைத் தர உள்ளார்களாம். நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு 3 சீட்,எப்போதுமே தொல்லை கொடுக்கும் தங்கபாலுவுக்கு 2 சீட், நீலகிரி பிரபுவுக்கு 2 சீட்,ஜெயந்தி நடராஜனுக்கு 2 சீட்,

சோனியாவுக்கு நெருக்கமான சுதர்சன நாச்சியப்பனுக்கு 2 சீட் என்று கோஷ்டிக்குஇத்தனை என சீட்களை கோஷ்டியின் பலத்துக்கு ஏத்தபடி ஒதுக்கிவிட்டு மிச்சத்தைதமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் சின்னச் சின்ன கோஷ்டிகளுக்குஒதுக்கவுள்ளார்களாம்.மேலும் பலர் டெல்லிக்கு காவடி தூக்கி சீட்டை அமுக்கும் முயற்சிகளிலும்ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினர் விண்ணப்பிப்பதற்காகதொகுதிக்கு 100 மனுக்கள் வீதம் அனைத்து மாவட்டத் தலைவர்களுக்கும் விண்ணப்பபாரம் அனுப்பி வைக்கப்படும்.

இந்த விண்ணப்ப பாரங்கள 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை பெற்று பூர்த்தி செய்துகொடுக்க வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அந்தந்ததொகுதிகளைச் சேர்ந்த மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் விண்ணப்பங்களைகொடுக்கலாம்.

விண்ணப்ப மனுவைக் கொடுப்பதற்கு எந்தவிதக் கட்டணமும் செலுத்தத்தேவையில்லை. எனவே மனுவை வாங்குவதற்கோ, கொடுப்பதற்கோ யாரும்கட்டணம் எதையும் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் அந்தந்த மாவட்டத்தலைவர்கள் 18ம் தேதியன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும். அதன் பின்னர் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வேட்பாளர் தேர்வுநடைபெறும் என கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X