For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்துக்கு எதிராக கேரளம் சட்ட திருத்தம்: பிரதமர் தலையிட அதிமுக கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை தமிழகம் உயர்த்துவதைத் தடுக்க சட்டத் திருத்தம் கொண்டு வரும்கேரள அரசைத் தடுக்க பிரதமர் தலையிட வேண்டும் என அதிமுக கோரியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்தது. மேலும் அணையின் பராமரிப்பை தமிழகத்திடம் ஒப்படைக்கவும்உத்தரவிட்டது.

இதைத் தடுக்கவும், உச்ச நீதிமன்ற உத்தரவை செயலிழக்கச் செய்யவும் சட்டத் திருத்தம் கொண்டு வர முடிவுசெய்துள்ளது கேரளம். இதற்காக நாளை சட்டசபையை அவசரமாகக் கூட்டியுள்ளது.

இந் நிலையில் இந்த விவகாரத் அதிமுக எம்பி நாராயணன் இன்று ராஜ்யசபாவில் கிளப்பினார். அவர்பேசுகையில், கேரள அரசின் செயல் நீதித்துறைக்கும் சட்டமன்றத்துக்கும் இடையே மோதலை உருவாக்கும்.

இதனால் அந்த முயற்சியை கேரளம் கைவிட வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரச தலையிட வேண்டும்.பிரதமரே நேரில் தலையிட்டு கேரள அரசின் செயலைத் தடுக்க வேண்டும்.

இதற்கு கேரள எம்பியும் மாஜி முதல்வருமான ஏகே ஆண்டனி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும் சட்டமன்றவிவகாரத்தை எப்படி நாடாளுமன்றத்தில் பேச முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பியான நிலோத்பல்பாசு கேட்டார்.

இதற்கு அதிமுக எம்பி மலைச்சாமி எதிர்ப்புத் தெரிவிக்கவே, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம்மூண்டது. அவைத் தலைவர் தலையிட்டு பிரச்சனை முடிந்ததாகக் கூறி வாதத்தை முடித்தார்.

ஆனால், அதிமுக எம்பிக்கள் மீண்டும் இந்த விவகாரத்தைக் கிளப்ப முயன்றனர். அதற்கு அவைத் தலைவர்அனுமதி மறுத்ததையடுத்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X