For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரியாறு: கேரள சட்டசபையில் தமிழகத்துக்கு எதிரான சட்ட மசோதா தாக்கல்

By Staff
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்:

முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை தமிழகம் உயர்த்துவதைத் தடுக்க வகை செய்யும் சட்ட மசோதாஇன்று கேரள சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக, கேரள எல்லையில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறுஅணை உள்ளது. இந்த அணையின் மூலம் தேனி முதல் ராமநாதபுரம் மாவட்டம்வரையிலான தென் மாவட்டங்கள் பெரும் பலன் பெறுகின்றன. இந்த நீரை நம்பிதேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட விவசாயிகள்உள்ளனர்.

அணையின் உயரம் தற்போது 136 அடியாக உள்ளது. இதை 152 அடியாக உயர்த்தவேண்டும் என்று தமிழகம் கோரி வந்தது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு, ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, பெரியாறு பாசனவிவசாயிகள் சங்கம் ஆகியோர் தொடர்ந்த வழக்கில், அணையின் உயரத்தை 142அடியாக உயர்த்த அனுமதித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் இதை ஏற்க மறுத்துள்ள கேரள அரசு, உச்சநீதிமன்ற உத்தரவை பைபாஸ்செய்வதற்காக அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க முடிவு செய்தது.

இதற்காக கேரள சட்டசபையின் 2 நாள் அவசரக் கூட்டம் இன்று கூடியது. இதில் இன்றுபெரியாறு அணை உயரத்தைக் கூட்டுவதைத் தடுக்கும் வகையில் கேரளா பாசனத்திட்ட சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

கேரள மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் கேரள மாநிலநீர்ப்பாசன, நீர்ப் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதவைத் தாக்கல் செய்தார்.

இதையடுத்து முதல்வர் உம்மன் சாண்டி பேசுகையில்,

அணை உயரத்தை அதிகரிப்பதால் பாதிக்கப்படும் மக்களின் நலனைக் கருத்தில்கொண்டே இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே நேரத்தில்தமிழகத்துடன் நமக்கிருக்கும் நல்லுறவை தொடர்ந்து பேணவே கேரளா விரும்புகிறது.

தமிழகத்துக்குத் தண்ணீர் தரக் கூடாது என்பதற்காக இச் சட்டத்தைக் கொண்டுவரவில்லை. மாநில நலனைக் காக்கவே கொண்டு வரப்பட்டுள்ளது.

அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் அதையொட்டியுள்ள 5 மாவட்டங்களில்வாழும் மக்கள் பாதிக்கப்படுவர். அவர்களது பாதுகாப்பே கேள்விக்குறியாகிவிடும்.மேலும் 113 ஆண்டு பழைய அணையால் இதற்கு மேல் நீரைத் தேக்கி வைக்கவும்முடியாது.

ஐந்து மாவட்ட மக்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்படும் என்பதால்கேரள மாநில மக்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டி இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்றார்.

இதையடுத்து பல்வேறு கட்சியினரும் இந்த மசோதா மீது பேசினர். நாளையும்விவாதம் நடக்கவுள்ளது. அதைத் தொடர்ந்து மசோதா ஒருமனதாகநிறைவேற்றப்படும்.

கேரளத்தின் இந்தச் செயலுக்கு தமிழகம் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கேரள அரசின் இந்தப்போக்குக்கு தமிழக பெரியாறு பாசனப் பகுதி விவசாயிகளிடையே கடும் எதிர்ப்புஎழுந்துள்ளது.

கேரள அரசைக் கண்டித்து நாடாளுமன்றத்திலும் அதிமுக உறுப்பினர்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்து கேரள எம்.பிக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்புச்செய்தனர்.

இந் நிலையில் பெரியாறு ஆற்றின் கடைமடைப் பகுதியான மதுரை மாவட்டம்மேலூரில், விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள அரசின் போக்கைக் கண்டித்த அவர்கள், கேரள அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்று அவர்கள்எச்சரித்துள்ளனர்.

இருக்கும் நிலத்தில் பெரும்பாலானவற்றை தேயிலை, ரப்பர், ஏலக்காய் என பணப்பயிர்களை உற்பத்தி செய்யும் கேரளா தனது உணவு தானிய, காய்கறி தேவைககுதமிழகத்தையே சார்ந்துள்ளது. இந் நிலையில் தமிழக விவசாயிகளுக்கு ஆப்புவைக்கும் சட்டத் திருத்தத்தை அந்த மாநிலம் கொண்டு வந்துள்ளது.

தெருவோர டீக் கடைகளில் ஆரம்பித்து கோலிவுட் வரை தமிழகத்தில் எல்லாம் கேரளமயம் தான். இந் நிலையில் தனது நன்றியை கேரளா நன்றாகக் காட்டியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X