For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் ரெடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவிருக்கும் பாஜகவின் வேட்பாளர்பட்டியல் தயாராகி விட்டது. வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பட்டியலை அந்தக் கட்சிவெளியிடுகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜக யாருடன் கூட்டணி வைத்துப் போட்டியிடப்போகிறது என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. தனித்தே போட்டி என்றுஅக்கட்சியின் தலைவர்கள் கூறி வந்தாலும், மறைமுகமாக விஜயகாந்துடனும் கூடவேஅதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால்,இருவருமே பாஜகவை இதுவரை கூட்டணியில் சேர்க்க முன் வரவில்லை.

சுப்பிரமணியம் சுவாமியின் ஜனதாக் கட்சி மட்டும் தான் பாஜகவுடன் கூட்டு சேரஆர்வம் தெரிவித்துள்ளது.

இந் நிலையில் சத்தம் போடாமல் தனது வேட்பாளர் பட்டியலை பாஜக தயாரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பலரிடம் இருந்தும் விருப்ப விண்ணப்பங்களைப் பெற்றபின்னர் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி, தேசியச் செயலாளர்பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் ஆய்வு செய்து வேட்பாளர்களை இறுதிசெய்துள்ளனராம்.

வரும் ஞாயிற்றுக்கிழமை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் சென்னை வருகிறார்.அமைந்தகரையில் பாஜக பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில்முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் கோவை மேற்கிலும், முன்னாள் தலைவரும்,தற்போதைய சட்டசபை பாஜக தலைவருமான கே.என்.லட்சுமணன் மதுரைகிழக்கிலும், பொதுச் செயலாளர் எச்.ராஜா ஆலந்தூரிலும், பொதுச் செயலாளர்குமாரவேலு பூங்காநகரிலும், வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராமசுகந்தன்தர்மபுரியிலும் போட்டியிடவுள்ளதாகக் கூறப்படுகிறது.

(வாழப்பாடி பெயரில் ஒரு தனிக் கட்சியை ஆரம்பித்து அதிமுகவுடன் சேர்ந்து ஒரு சீட்பெற சுகந்தன் முயற்சித்தார். ஆனால், வெற்றி கிடைக்கவில்லை)

முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே அண்ணாநகரிலும், ஜெகவீரபாண்டியன்மயிலாடுதுறையிலும், பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலிலும், வேலாயுதம்பத்மநாபபுரத்திலும், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிடம் செல்போன் மூலம் அடிவாங்கிய சென்சார் போர்டு உறுப்பினர் வானதி சீனிவாசன் அல்லது லலிதா சுபாஷ்மயிலாப்பூரிலும்,

கவிஞர் காசிமுத்து மாணிக்கம் அறந்தாங்கியிலும், நாசே ராமச்சந்திரன் தாம்பரம்தொகுதியிலும், முன்னாள் தலைவர் டாக்டர் கிருபாநிதி காட்டுமன்னார்கோவிலிலும்,குமரி அனந்தனின் மகள் டாக்டர் தமிழிசை கே.கே.நகரிலும் நிறுத்தப்படக் கூடும்எனத் தெரிகிறது.

இவர்களது பெயர்கள் தான் முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X