அதிமுகவுக்கு தாவிய எம்எல்ஏ அண்ணனிடம் ரெய்ட்
பாண்டிச்சேரி:
முகையூர் தொகுதியை திமுகவுக்கு ஒதுக்காததை கண்டித்து திமுகவிலிருந்து விலகிஅதிமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி.சம்பத்தின் சகோதரர்மருத்துவமனையில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனைநடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் முகையூர் தொகுதி திமுக கூட்டணியில் பாமகவுக்குஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தொகுதி திமுகவினர் கடும அதிருப்திஅடைந்துள்ளனர்.குறிப்பாக முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வான ஏ.ஜி.சம்பத்தின் ஆதரவாளர்கள்போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். திமுக கொடிக் கம்பங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து சம்பத் திமகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்து விட்டார்.
இந் நிலையில் புதுவையில் உள்ள சம்பத்தின் சகோதரர் டாக்டர் இளங்கோவனுக்குசொந்தமான மருத்துவமனையில் இன்று காலை 6 பேர் கொண்ட வருமான வரித்துறைஅதிகாரிகள் குழு திடீர் சோதனையில் இறங்கியது.
திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் சம்பத் இணைந்துள்ள நிலையில் அவரதுசகோதரர் மருத்துவமனையில் வருமான வரி சோதனை நடைபெற்றிருப்பதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications