For Daily Alerts
Just In
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மகன் தற்கொலை
சென்னை:
மறைந்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மகன் சண்முகம் விஷம் குடித்துதற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 61.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சண்முகம் நந்தனம் நியூ டவர் பிளாக்கில் வசித்து வந்தார்.குடிப்பழக்கம் உள்ள இவரை விட்டு மனைவி, குழந்தைகள் பிரிந்துவிட்டனர். இதனால் தனித்து வசித்து வந்தார்.
போதிய வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இந் நிலையில் இன்று காலை அவர் தனது வீட்டில்இறந்து கிடந்தார்.
மதுவில் விஷம் கலந்து, தன் தந்தையின் படத்துக்கு முன் அமர்ந்தபடி குடித்துள்ளார் சண்முகம். கலைவாணரின்பாடல்களைக் கேட்டவாறே விஷமருந்தியுள்ளார்.
INDIA NEWS |
![]() |