For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிலம்: ஜெவுக்கு கருணாநிதி மீண்டும் நெத்தியடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தரிசு நிலம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவின் விளக்கத்துக்கு பதிலடியாக திமுகதலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் நிலமில்லாத ஏழை விவசாயிகள் 55 லட்சம் பேருக்கு தலா 2 ஏக்கர் நிலம்தரப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை கடுமையாகவிமர்சித்த முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் மூன்றரை லட்சம் ஏக்கர் நிலம்தான்உள்ளது. இதில் எப்படி 55 லட்சம் பேருக்கு நிலம் தர முடியும் என்று கேட்டிருந்தார்.

இதற்குப் பதில் அளித்த கருணாநிதி, ஜெயலலிதா அரசு 2001ல் தாக்கல் செய்தபட்ஜெட்டில் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதைசுட்டிக் காட்டினார்.

இதற்கு விளக்கம் அளித்த ஜெயலலிதா, அந்த நிலம் எல்லாம் தனியாருக்குச்சொந்தமான பட்டா நிலம், அரசு நிலம் அல்ல என்று கூறியிருந்தார். இப்போது இதற்குகருணாநிதி பதில் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தரிசு நிலம் தொடர்பாக நான் ஆதாரத்துடன்விளக்கியதைத் தொடர்ந்து தனது வாதத்திலிருந்து இறங்கி வந்துள்ளார் ஜெயலலிதா.

முதலில் நிலமே இல்லை என்றவர் இப்போது தமிழகம் முழுவதும் 50 லட்சம் ஏக்கர்தரிசு நிலம் இருப்பதை இப்போது ஒத்துக் கொண்டுள்ளார்.

நானும் அந்த 50 லட்சம் ஏக்கர் நிலமும் அரசுக்குச் சொந்தமானவை என்றுஒருபோதும் கூறவில்லை. அந்த நிலங்களை தனியாரிடமிருந்து வாங்கி பண்படுத்திஏழை விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் தரலாம் என்பதுதான் திமகவின் எண்ணம்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்தி, அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைமீண்டும் உறுதியோடு சொல்லிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

மாதம் 2 முறை அரிசி:

முன்னதாக நேற்று சென்னை சைதாப்பேட்டையிலிருந்து தனது பிரசார சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய கருணாநிதி பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்தமேடையில் பேசுகையில்,

ரேசன் கடைகளில் கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்படும் என நான்அறிவித்துள்ளதை ஏழை, எளிய மக்கள் வரவேற்றுள்ளனர்.

என்னை சந்தித்த பல பெண்களும், அய்யா, எங்களால் 20 கிலோ அரிசியைமொத்தமாக விலை கொடுத்து ஒரே முறையில் பெற முடியாது.

எனவே அதை இரண்டாகப் பிரித்து வழங்க முடியுமா என்று கேட்டனர். அதைக்கேட்ட நான் அதை நான் மட்டும் முடிவு செய்ய முடியாது. தலைமைச் செயலாளர்(கூட்டத்தில் பலத்த கைத்தட்டல்) உள்ளிட்டோருடன் ஆலோசித்த பின்னர்தான் செய்யமுடியும் என்றேன்.

இருந்தாலும் அவர்களுக்கு ஒரு உறுதிமொழியைச் சொல்லிக் கொள்கிறேன். ரேஷன்மூலம் வழங்கப்படும் அரிசி கிலோவுக்கு 2 ரூபாய் விலையில் 15 நாட்களுக்குஒருமுறை என மாதம் இரு முறையாக, அதாவது பத்து பத்து கிலோ அரிசியாகவழங்கப்படும்.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அத்தனை அம்சங்களும் திமக ஆட்சிக்குவந்தவுடன் நிறைவேற்றப்படும். இதில் மக்களுக்கு எந்தவித சந்தேகமும் வேண்டாம்என்றார்.

ஜெ ஆணவத்துக்கு முடிவு:

பின்னர் ஆலந்தூர், தாம்பரம், மதுராந்தகம், செங்கல்பட்டு, ஒலக்கூர் ஆகியஇடங்களில் வேனில் இருந்தபடியே பிரசாரம் செய்து பேசினார்.

இரவில் அவர் விழுப்புரத்தில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் திமுகவேட்பாளர் பொன்முடிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துப் பேசினார்.

அவர் பேசுகையில், விழுப்புரத்தில் இப்படி ஒரு கூட்டத்தை தொடர்பான செய்திகள் நான்பார்த்ததே இல்லை. கடல் போல திரண்டு வந்திருக்கிறீர்கள்.

வரப் போகும் தேர்தல் ஜனநாயகத்திற்கும், ஆணவ ஆட்சிக்கும் இடையிலானபோராகும். இந்தப் போரில் வெல்லப் போவது ஜனநாயகமா இல்லை, ஆணவஆட்சியா என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.

எதற்கெடுத்தாலும் நான் நான் நான் என்று ஒரு ஆணவக் குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அந்த ஏகாதிபத்திய, ஆணவக் குரல் போயஸ் தோட்டத்தோடுநின்று போகட்டும். தமிழகம் முழுவதும் அக்குரல் ஒலிக்க தமிழர்கள் இனியும்அனுமதிக்கக் கூடாது.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அத்தனையும் நிச்சயம்நிறைவேற்றப்படும். திமுக ஆட்சியின் அடுத்த பட்ஜெட்டே இந்த தேர்தல் அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் ஏரி, குளங்கள் தூர் வாரப்படவில்லை. மழைவெள்ளம் வந்தபோது ஏரிகள், குளங்களில் தண்ணீரைத் தேக்க முடியாமல் அனைத்தும்வீணாகி வயல்களிலும், வீடுகளிலும் புகுந்து மக்களையும், விவசாயிகளையும்சிரமப்படுத்தின.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான நிவாரணத்தை இந்த அரசு வழங்கவில்லைஎன்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X