For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ-கருணாநிதி-வைகோ தமிழ் புத்தாண்டு வாழ்த்து

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி ஆளுனர் பர்னாலா, முதல்வர் ஜெயலலிதாஆகியோர் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

பார்த்திப ஆண்டு முடிந்து விய ஆண்டு நாளை பிறக்கிறது. இதையொட்டி தமிழகஆளுநர் பர்னாலா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்த தமிழ்ப் புத்தாண்டு,தமிழர்களின் வாழ்க்கையில் அனைத்து வளத்தையும், அமைதியையும் கொண்டு வந்துசேர்க்கட்டும் என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா:

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தத் தமிழ்ப்புத்தாண்டில், தமிழர்களின் இல்லங்களிலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி கொழிக்கட்டும்,பூக்கட்டும் புது வசந்தம், சேர்க்கட்டும் ஆண்டு முழுவதும் இன்பம்.

தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள தமிழர்கள்அனைவருக்கும் உளம் கணிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று அவர்தெரிவித்துள்ளார்.

கருணாநிதி:

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

சித்திரைத் திருநாள், தமிழர்தம் வாழ்விற்குப் புதியதொரு திசையும், வளத்திற்குப்புத்தொளியும் கிடைத்திடும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் வாழ்த்துகிறேன்.

இத்தரையில் புகழ் முத்திரைப் பதித்த வீரமும், இணையில்லா நம் இனத்தைப் பற்றியவேகமும், விவேகமும், தாய்மொழி ஆர்வமும் கொண்டோர் தலை நிமிர்ந்தார்.தன்மான எழுச்சி பெற்றார் எனும் செய்தி இன்பத் தேனாக நம் செவியில் புகுந்து இந்நாளில் புதிய எழுச்சி பூத்துக் குலுங்கட்டும்.

ஏழை, எளியோர் ஏற்றம் பெற்றுச் சிரித்து மகிழ்ந்திடவும், ஏமாற்றிக் கொழுக்கும்எத்தர்கள், கூனிக் குறுகிச் சிறுத்திடவும், மக்களின் குரலுக்கு எவ்வித மதிப்பும் தராதமதோன்மத்தர்களின் ஆணவமும், வீண் ஆராவாரமும் அடங்கிடவும்,

தமிழ்ப் பரம்பரை மானத்தைத் தாழ்த்திப் பேசியோர் தக்க பாடம் பெற்றிடவும்,வரலாற்றில் தொடர்ந்து வரும் துரோகத்தைத் தூளாக்கிடவும், உண்மையானமக்களாட்சி மாண்புகள் மீண்டும் மலர்ந்து மணம் வீசிடவும், இந்த சித்திரைத்திருநாளில் சிறப்புறுதி பூணுவோமாக.

உலகெங்கிலும் பரவியிருக்கும் நமது தாய்த் தமிழ் உடன்பிறப்புக்களுடன் இந்தமகிழ்ச்சியினைப் பகிர்ந்து கொள்வோம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

வைகோ:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்தியில்,

இயற்கை தந்த இடர்களையும் துயர்களையும் வேதனைகளையும் சோதனைகளையும்போக்கு சாதனை மலர்களாய் சங்கீதச் சிரிப்பைக் காட்டும் சித்திரைத் திங்கள் பிறக்கக்கண்டு காலங்காலமாய் விழாக் கோலம் கொண்டிடும் தமிழர் வாழ்வில் ஜாதி, மதபேதங்கள் நீங்கி,

சமய நல்லிணக்கமும், சமூக ஒற்றுமையும் தழைக்கப்பட்டும் என்று மறுமலர்ச்சிதிராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந் நாளில் வாழ்த்துவதில் மட்டற்றமகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

ராமதாஸ்:

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக மக்கள் ஒரு விடியலுக்காக சுதந்திரத்துக்காக ஏங்கிக் கொண்டிருக்கும்நிலையில் விய வருடம் பிறக்கிறது. மக்கள் அனைவரும் எதிர்பார்ப்பதைப் போலதமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு, மக்கள் விரும்புகிற சுதந்திரமும் விடியலும்கிட்ட வேண்டும்.

இந்த விடியலால் ஏற்படும் மாற்றத்துக்குப் பின் தமிழ் வாழ, தமிழ்நாடு செழிக்க,தமிழர்கள் எல்லா வளமும் பெறப் பாடுபடும் புதிய அரசு அமையும் என்றநம்பிக்கையோடு எல்லோரும் இந்த விய வருடத்தை வரவேற்போம்.

அதே போல காங்கிரஸ் தலைவர்கள் கிருஷ்ணசாமி, வாசன், இந்திய கம்யூனிஸ்ட்தலைவர் தா.பாண்டின், எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்எம் வீரப்பன், தமிழ் மாநிலமுஸ்லீம் லீக் தலைவர் சேக் தாவூத் உள்ளிட்டோர் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களைத்தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X