For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவில் இணைந்தார் அமைச்சர் இன்பத்தமிழன்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை :

மறைந்த தாமரைக்கனியின் மூத்த மகனும், தமிழக விளையாட்டுத்துறை மற்றும்இளைஞர் நலத்துறை அமைச்சருமான இன்பத் தமிழன் இன்று திமுக வில்இணைந்தார்.

அதிமுகவிலிருந்து தாமரைக்கனி நீக்கப்பட்ட பின்னர் அவருக்கு எதிராகஜெயலலிதாவால் களம் இறக்கப்பட்டவர் இன்பத் தமிழன். தந்தையும், மகனும் படுஆக்ரோஷமாக அரசியலில் ஈடுபட்டதையும், கடுமையாக மோதிக் கொண்டதையும்பார்த்து தமிழகமே அரண்டு போனது.

அந்த குடும்பமே உடைந்து போனது. ஜெயலலிதாவுக்காக தனது மொத்தக்குடும்பத்தையும் பகைத்துக் கொண்டவர் இன்பத் தமிழன்.

ஜெயலலிதாவிடம் நற்பெயர் பெற வேண்டும் என்பதற்காக தனது பெயரின்இனிஷியலைக் கூட மாற்றிக் கொண்டவர் இன்பத் தமிழன்.

இப்படிப்பட்ட இன்பத் தமிழன், தனது தந்தை இறந்தபோது அவரது உடலுக்குமரியாதை செலுத்தக் கூடச் செல்லவில்லை. கடைசி நிமிடத்தில்ஜெயலலிதாவிடமிருந்து பச்சைக் கொடி கிடைத்த பிறகே சுடுகாட்டுக்குச் சென்றுதந்தை உடலுக்கு மரியாதை செலுத்தக் கிளம்பினார்.

ஆனால் அவரை தாமரைக்கனி உடல் இருந்த பக்கம் கூட வர அவரது குடும்பத்தினர்விடவில்லை.

தனது மொத்தக் குடும்பத்தையும் எதிர்த்து வந்துள்ளதால், தனக்கு மீண்டும்ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு கொடுப்பார் எனஇனபத் தமிழன் நம்பினார்.

ஆனால் அவருக்கு சீட கிடைககவில்லை. இன்பத் தமிழன் மீது பல்வேறு புகார்கள்இருந்ததால் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை.

இதனால் இன்பத் தமிழன் கடும் அதிருப்தியில் இருந்தார். தனது தொகுதியில் உள்ளநாடார் சங்கங்களிடையே திமுகவுக்கு வாக்களிக்குமாறு மறைமுகமாக பிரச்சாரம்செய்து வந்தார்.

இதையறிந்த திமுக அவரை உள்ளே இழுக்க முடிவு செய்து வேலை பார்த்தது.இன்பத்தமிழனின் தம்பி தங்கமாங்கனி ஏற்கனவே திமுகவில் தான் உள்ளார்.

இந் நிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்திற்குச் சென்ற இன்பத் தமிழன்திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதன் பின்னர் இன்பத் தமிழன் வெளியிட்ட அறிக்கையில்,

பல்லாண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த நான் விடுதலை மன நிம்மதியுடனும்,விடுதலை உணர்வுடனும் திமுகவில் இணைந்துள்ளேன்.

நான் இத்தனை காலம் அமைச்சராக இருந்தேன் என்று சொல்வதை விட அடிமையாகஇருந்தேன் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஜெயலலிதாவின் தூண்டுதலால்எனது குடும்பத்தையே எதிரத்து அரசியல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.இதற்காக இப்போது வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார் இன்பத் தமிழன்.

அதிமுகவில்தான் இன்பத் தமிழன் புறக்கணிக்கப்பட்டார் என்றால் தாமரைக்கனியின்மற்ற மகன்கள் யாருக்கும் திமுகவில் (அனைவரும் இப்போது திமுகவில்உறுப்பினர்கள்) சீட் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் அந்தக் குடும்பத்தினர் திமுகவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திமுகவில் பாஜக எம்எல்ஏ:

இந் நிலையில் மயிலாடுதுறை பாஜக எம்எல்ஏவான ஜெகவீரபாண்டியனும் திமுகவில் இணைந்துள்ளார்.

சட்டமன்றத்தில் காது கிழியும் அளவுக்கு அதிமுகவுக்கு ஜால்ரா போட்டு வந்த ஜெகா, இந்த முறை பாஜக தனித்துப் போட்டியிடுவதால், தனதுடெபாசிட் மற்றும் மரியாதையை கணக்கில் கொண்டு, தனக்கு சீட் வேண்டாம் என கட்சியிடம் சொன்னார்.

ஆனாலும் கேட்காமல் இவர் தலையில் மயிலாடுதுறையை தலைமை கட்டிவிட்டது. இதையடுத்து தனக்கு வேண்டிய ஒரு டம்மியை வேட்பாளராக்கிவிட்டுதப்பிவிட்டார் ஜெகா. இந் நிலையில் திடீரென கருணாநிதியை நேரில் சந்தித்து திமுகவில் ஐக்கியமாகிவிட்டார். அவரது மனைவியும் மயிலாடுதுறை நகராட்சித்தலைவியுமான தேன்மொழியும் திமுகவில் இணைந்துவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X