• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அன்பழகன்-நிதி, ஸ்டாலின்-உள்ளாட்சி: புதிய அமைச்சர்களின் இலாகாக்கள் விவரம்

By Staff
|

சென்னை:

கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளஅமைச்சர்களுக்கான இலாகாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன் விவரம்:

கருணாநிதி - முதல்வர். பொது, பொது நிர்வாகம், இந்திய நிர்வாகப் பணி, இந்தியபோலீஸ் பணி, மாவட்ட வருவாய் அதிகாரிகள், உள்துறை, காவல், தகவல்தொழில்நுட்பம், மதுவிலக்கு அமல், தமிழ் வளர்ச்சி, ஊழல் தடுப்பு, சுரங்கம்,சிறுபான்மையினர் நலம்.

க.அன்பழகன் - நிதி, திட்டமிடுதல், சட்டப்பேரவை விவகாரம், தேர்தல்.

ஆற்காடு என். வீராசாமி - மின்சாரம், மரபு சாரா எரிசக்தி, சிறு மற்றும் குடிசைத்தொழில்கள்.

மு.க.ஸ்டாலின் - உள்ளாட்சி நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி,பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன்கள், வறுமை ஒழிப்பு திட்டம், நகர்ப்புறமற்றும் ஊரக குடிநீர் வினியோகம்.

கோ.சி.மணி - கூட்டுறவு மற்றும் புள்ளிவிவரம்.

வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் - விவசாயம், விவசாய பொறியியல், விவசாய கூட்டுறவுக்கழககங்கள், தோட்டக்கலை, சர்க்கரை வளர்ச்சி.

துரைமுருகன் - பொதுப்பணி, நீர்ப்பாசனம்.

பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் - இந்து, சமய அறநிலையத்துறை.

க.பொன்முடி - உயர் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், முன்னாள்ராணுவத்தினர்.

கே.என்.நேரு - போக்குவரத்து, தேசியமயமாக்கப்பட்ட போக்குவரத்து, மோட்டார்வாகனச் சட்டம்.

எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் - பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர்மற்றும் வரைமுறைப்படுத்தப்படாத வகுப்பினர், வெளிநாடு வாழ் இந்தியர், அகதிகள்,பதிவுத்துறை மற்றும் முத்திரைத்தாள்.

ஐ.பெரியசாமி -வருவாய், வருவாய் நிர்வாகம், மாவட்ட வருவாய், துணைஆட்சியர்கள், சட்டம், நீதிமன்றம், சிறை, சிட் பதிவு மற்றும் கம்பெனிகள்.

என்.சுரேஷ்ராஜன் - சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம்.

பரிதி இளம்வழுதி - தகவல், விளம்பரம், உள்ளூர் நிர்வாகம், திரைப்படத்தொழில்நுட்பம், திரைப்படத் துறை சட்டம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சென்னைபெருநகர வளர்ச்சி கழகம்.

ஏ.வி.வேலு - உணவு, கூட்டுறவு, சிவில் சப்ளைஸ், நுகர்வோர் பாதுகாப்பு.

சுப. தங்கவேலன் - வீட்டு வசதி, நகர்ப்புற திட்டமிடுதல்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - சுகாதாரம், குடும்ப நலம், மருத்துவக் கல்வி.

தா.மோ.அன்பரசன் - தொழிலாளர் நலன், மக்கள் தொகை, வேலை வாய்ப்பு மற்றும்பயிற்சி, இரும்பு, எஃகு கட்டுப்பாடு, செய்தித் தாள் கட்டுப்பாடு, நகர்ப்புற மற்றும்ஊரக வேலை வாய்ப்பு உருவாக்க திட்டம்.

கே.ஆர்.பெரியகருப்பன் - குடிசை மாற்று வாரியம் மற்றும் தரிசு நில மேம்பாடு.

என்.கே.கே.பி.ராஜா - கைத்தறி மற்றும் ஜவுளி.

தங்கம் தென்னரசு - பள்ளிக் கல்வி மற்றும் தொல்பொருள் துறை.

எஸ்.என்.எம். உபையதுல்லா - வணிக வரிகள்.

டி.பி.எம். மொய்தீன் கான் - விளையாட்டு, இளைஞர் நலன், சுற்றுச்சூழல், இஸ்லாமியபெளன்டேஷன்.

என்.செல்வராஜ் - வனம்.

வெள்ளக்கோவில் சாமிநாதன் - நெடுஞ்சாலை மற்றும் துறைமுகங்கள்.

டாக்டர் பூங்கோதை - சமூக நலம், மகளிர், குழந்தைகள் நலம், சத்துணவு, ஊனற்றோர்நலன், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள்.

கீதா ஜீவன் - கால்நடை பராமரிப்பு.

தமிழரசி - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்.

கே.பி.பி.சாமி - மீன்வளம் மர்றும் மீன்வள மேம்பாடு.

யு. மதிவாணன் - பால்வளம்.

கே.ராமச்சந்திரன் - காதி வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்.

முன்னதாக துரைமுருகனை சபாநாயகராக்கிவிட்டு அவருக்குப் பதில் முல்லைவேந்தன் அமைச்சராவார் என்று கூறப்பட்டது. ஆனால், அதை துரைமுருகன்விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் விரும்பியபடியேபொதுப்பணித்துறை அமைச்சராகிறார்.

இதனால் முல்லை வேந்தனுக்கு இடமில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X