For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செப்டம்பர் முதல் கலர் டிவி வினியோகம்

By Staff
Google Oneindia Tamil News

திருவாரூர்:

அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 மற்றும் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர்17ம் தேதி முதல் கலர் டிவி வழங்கும் திட்டம் தொடங்கும் என்று தல்வர் கருணாநிதிஅறிவித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தலில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்குநன்றி தெரிவிக்கும் வகையில் திருவாரூரில் பொதுக் கூட்டம் நடந்தது. அதில்கருணாநிதி பேசுகையில்,

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றாகநிறைவேற்றப்பட்டு வருகின்றன.

முதல் நடவடிக்கையாக 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டம் ஜூன் 3ம்தேதி முதல், அதாவது எனது பிறந்த நாள் முதல் அமலுக்கு வருகிறது. பொதுமக்கள்மத்தியில் இதற்கான உத்தரவை நான் பிறப்பித்தேன்.

இதேபோல ஜூலை 15ம் தேதி முதல் சத்துணவுடன் வாரம் இருமுறை முட்டைவழங்கும் திட்டத்திற்கும் உத்தரவிட்டுள்ளேன். இதையும் மக்கள் முன்பேஅறிவித்தேன்.

சத்துணவு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தரும் வகையில் சத்தாண உணவு மாணவமாணவியருக்குக் கிடைக்கும் வகையில் இத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.அதன்படி வாரம் இருமுறை மாணவ, மாணவியருக்கு முட்டை வழங்கப்படும்.

இதேபோல இன்னொரு வாக்குறுதியான கலர் டிவி வழங்கும் திட்டம் அமலுக்குவரவுள்ளது. மொத்தமாக ஒரே நேரத்தில் அத்தனை பேருக்கும் கொடுத்து விடமுடியாது.

இருப்பினும் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 மற்றும் பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆகிய தேதிகளில் கலர் டிவி வினியோகம் தொடங்கும்.தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி படிப்படியாக வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளஅனைவருக்கும் கலர் டிவி கட்டாயம் வழங்கப்படும்.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அத்தனை வாக்குறுதிகளும்நிறைவேற்றப்படும். ஒரே நாளில் அத்தனையையும் நிறைவேற்றி விட முடியாதுஎன்பது உங்களுக்கும் தெரியும். படிப்படியாக ஒவ்வொன்றாக, அத்தனையும்நிறைவேற்றப்படும்.

இதேபோல ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தரும் திட்டம் குறித்த ஆய்வும்தொடங்கிவிட்டது. விரைவில் அதுதொடர்பான நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்.

இப்போது சட்டமன்றம் நடந்து வருவதால் இதற்கு மேல் என்னால் அறிவிப்புகளைவெளியிட இயலாத நிலை. திமுக தேர்தல் அறிக்கைதான் வரப் போகிற பட்ஜெட்என்பதை சுருக்கமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளவை திமுகவின் திட்டங்கள்மட்டுமல்ல, மாறாக கூட்டணிக் கட்சிகளின் திட்டங்களையும் அதில் சேர்த்துள்ளோம்.இதுதவிர கூட்டணிக் கட்சிகள் கூறும் திட்டங்களையும் பரிசீலிக்க நாங்கள் தயாராகவேஇருக்கிறோம்.

எதிர்க்கட்சிகள் எந்த நல்ல திட்டத்தையாவது பரிந்துரைத்தால் அதையும் பரிசீலிக்கநாங்கள் தயாராக, திறந்த மனதுடன் உள்ளோம்.

கூட்டுறவு சங்கங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எங்களுக்குத்தகவல்கள் உள்ளன. அதற்காக கூட்டுறவு சங்கங்களை முழுமையாக ஒழித்து விடடியாது. ஒரு திட்டத்தில் தவறு இருந்தால் அதை சரி செய்ய வேண்டுமே தவிர அழித்துவிடக் கூடாது, நாங்கள் அதைச் செய்ய மாட்டோம்.

கூட்டுறவு சங்கங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுப்போம் என்றார்கருணாநிதி.

கூட்டத்தில் அமைச்சர்கள் ஸ்டாலின், பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கேபன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். கூட்டணிக் கட்சி பிரமுகர்களும்பொதுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X