• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இலங்கையில் தமிழைக் காப்பாற்றிய இந்தி!

By Staff
|

சென்னை:

1983ம் ஆண்டு இலங்கையில் நடந்த இனக் கலவரத்தின்போது சிங்களவெறியர்களிடமிருந்து பழம்பெரும் தமிழ் திரைப்படப் பாடல் ஒலிப்பேழைகளைஇந்தி ஒலிப்பேழைகளுக்கு இடையில் மறைத்து வைத்து, இலங்கை வானொலிகாப்பாற்றியதாக இலங்கையைச் சேர்ந்த பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் முத்தையாஜெகன்மோகன் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் பிரபலமான வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் முத்தையாஜெகன்மோகன். தமிழ் கிரிக்கெட் விமர்சகரும் கூட. சென்னைக்கு வந்திருந்தஜெகன்மோகன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

12 வருடங்களாக நிகழ்ச்சித் தொகுப்பாளராக உள்ளார் ஜெகன்மோகன். இலங்கைகிரிக்கெட் அணி பங்கேற்கும் ஆட்டங்களை தமிழில் நேரடி வர்னணை செய்வதில்முத்தையா நிபுணர் ஆவார். அவரது தமிழ் விமர்சனத்திற்கு பெரும் ரசிகர் கூட்டமேஇலங்கையில் உள்ளதாம்.

அவருக்கு தமிழகத்திலும் நிறைய ரசிகர்கள் உண்டு. நெல்லையில் கடந்த 3ஆண்டுகளில் மட்டும் இரண்டு முறை நேரில் அழைக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளார்ஜெகன்மோகன்.

இவையெல்லாம் எனக்குக் கிடைத்த பெருமை அல்ல தமிழுக்குக் கிடைத்த சிறப்புஎன்று அடக்கமாக கூறுகிறார் ஜெகன்மோகன்.

தமிழ் மீது தீராக் காதல் கொண்டவரான ஜெகன்மோகனுக்கு சில ஆங்கிலவார்த்தைகளை தமிழ்படுத்துகிறோம் என்ற பெயரில் மிகவும் கொச்சையாகமொழிபெயர்ப்பது பெரும் வருத்தம் தருகிறதாம்.

உதாரணமாக, கிரிக்கெட்டில் பயன்டுத்தப்படும் வைட் பால் என்ற ஆங்கில பதத்திற்குசரியான மொழிபெயர்ப்பு இப்போதைக்கு இல்லை என்று கூறும் ஜெகன்மோகன்,அதை அகலப்பந்து என்று சில வர்னணையாளர்கள் கூறுவதை தவறு என்று சாடுகிறார்.

இப்படி தமிழைக் கொல்வதற்குப் பதில் வைட் பால் என்றே கூறி விட்டுப் போகலாம்என்றும் கூறுகிறார் ஜெகன்மோகன்.

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளீதரனின் திருமணம் சென்னையில்நடந்தபோது இந்த முத்தையாவும் திருமணத்திற்கு வந்திருந்தார்.

வந்தவர் விருந்து சாப்பிட்டுவிட்டு, வெத்தலை போட்டுவிட்டுப் போகாமல்,தொலைபேசி மூலம் முத்தையாவின் திருமணத்தை நேரடியாக இலங்கைவானொலியில் வர்னணை செய்து முரளீதரனின் திருமணத்தை நேரில் காணும்உணர்வை அங்குள்ள தமிழர்களிடம் ஏற்படுத்தினார்.

தமிழக வானொலி நிலையங்களிடம் கூட இல்லாத பல அரிய தமிழ்ப் பாடல்கள்உள்ளிட்ட படைப்புகள் இலங்கை வானொலி நிலையத்தில் உள்ளதாம்.இவற்றையெல்லாம் அவர்கள் பொக்கிஷம் போல பாதுகாத்து வருகிறார்களாம்.

கடந்த 1983ம் ஆண்டு இலங்கையில் பெரும் இனக் கலவரம் வெடித்தபோதுஇலங்கை வானொலி நிலையத்தையும் சிங்கள வெறியர்கள் தாக்கினார்கள்.

அப்போது தமிழ்ப் பாடல் சேகரிப்புகளைத் தேடிப் பிடித்து அவர்கள் அழிக்கத்திட்டமிட்டனர். இதை அறிந்த வானொலி நிலையம் புத்திசாலித்தனமாக ஒருகாரியத்தை செய்தது.

அங்கு இருந்து அரிய தமிழ்ப் பாடல் ஒலிப்பேழைகளை இந்திப் பாடல்களின்ஒலிப்பேழைகளுக்குள் வைத்து சிங்கள வெறியர்களை ஏமாற்றி தமிழ்ப் பாடல்களைக்காப்பாற்றினார்களாம்.

அங்கு உள்ள தொகுப்புகளைப் பார்த்து டி.எம்.செளந்தரராஜன் பிரமித்துப் போய்பாராட்டினாராம். எனது பாடல்கள் பலவற்றை என்னாலேயே இப்போது தமிழகத்தில்கேட்க முடியாது. காரணம் அந்த ரெக்கார்டுகள் அங்கு இல்லை. ஆனால் இங்கேஅத்தனை தொகுப்பையும் பத்திரமாக வைத்துள்ளீர்களே என்று சந்தோஷமாகிவிட்டாராம்.

இப்படி பெருமையுடன் கூறும் ஜெகன்மோகனுக்கு ஒரு வருத்தம் உண்டு.இலங்கையில் ஏராளமான எப்.எம். ரேடியோக்கள் வந்து விட்டனவாம். இந்தநிலையங்களில் எல்லாம் தமிழைக் கொல்வதுதான் முக்கிய வேலையாக இருக்கிறதுஎன்கிறார்.

தமிழை தமிழாக பேசாமல் ஆங்கிலம் கலந்து பேசும் இவர்களின் தமிழைக் கேட்டால்எனக்கு ரத்தக் கண்ணீரே வருகிறது என்று வேதனையாக கூறுகிறார். (நம்ம ஊருஎம்.எம்மை இவர் கேட்டதில்லை போலிருக்கிறது)

இலங்கையில் (வானொலியைப் பொறுத்தவரை) இப்போதுதான் தமிழ்க் கொலைஆரம்பித்திருக்கிறது, ஆனால் தமிழகத்தில் தமிழ் செத்து பல வருஷமாச்சு என்பதைஜெகன்மோகன் அறியவில்லை போலும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X