For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிடிஆர் மனைவியை களம் இறக்க திமுக திட்டம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் மறைந்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் மனைவி ருக்மணியை களம் இறக்க திமுக தலைமை யோசித்துவருகிறது.

பிடிஆரின் மகன் தியாகராஜன் தனது அமெரிக்க பிஸினஸை விட்டுவிட்டுஅரசியலுக்கு வர விரும்பவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து ருக்மணியேதிமுகவின் சாய்ஸ் என்கிறார்கள்.

மதுரை மத்திய தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர் ஆனவர் பி.டி.ஆர்.துரதிர்ஷ்டவசமாக அமைச்சராகப் பதவியேற்ற ஓரிரு நாளிலேயே அவர்மரணமடைந்து விட்டார்.

இதனால் மதுரை மத்திய தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.அனேகமாக செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெறலாம் எனத் தெரிகிறது.

இங்கு பூர்வாங்க தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன. வாக்காளர்களுக்கு புகைப்படஅடையாள அட்டை வழங்கும் பணியை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.

பொதுத் தேர்தலுககுப் பின்னர் வரும் முதல் இடைத் தேர்தல் என்பதால் அனைத்துஅரசியல் கட்சிகளிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குறிப்பாக திமுக தரப்பு இந்தத் தேர்தலை மிகவும் கவனத்துடன் சந்திக்க முடிவுசெய்துள்ளது. இத்தொகுதியை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில்திமுக உள்ளது.

ஏற்கனவே திமுக அரசின் முக்கிய வாக்குறுதிகளான ஏழைகளுககு 2 ஏக்கர் இலவசநிலம், இலவச கலர் டிவி ஆகிய திட்டங்களை மத்திய தொகுதியில் அமல்படுத்தமுடியாது என்று அதிமுக தரப்பு பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது.

இதற்கு மக்கியக் காரணங்களாக அதிமுக தரப்பு கூறுவது என்னவென்றால், டிவிகிடைக்க இத்தொகுதியில் சமத்துவபுரம் இல்லை, இலவசமாக கொடுக்க தரிசுநிலங்களும் இல்லை என்பதே.

மேலும் இத்தொகுதியை கைப்பற்றி திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவும்அதிமுக தீவிரமாக உள்ளது.

இத்தொகுதியின் வெற்றியை பிரஸ்டீஜ் இஷ்யூவாக கருதும் திமுக வலுவானவேட்பாரை நிறுத்தவும் பிடிஆரின் அனுதாப அலை லாபமாக்கிக் கொள்ளவும்முயன்று வருகிறது.

இதனால் அவரை மகனை நிறுத்த முயற்சி நடந்தது. ஆனால், அமெரிக்கப்பெண்மணியை மணந்த தியாகராஜன், அமெரிக்க பிஸினஸை விட்டுவிட்டுஅரசியலுக்கு வர முழு ஆர்வம் காட்டவில்லை.

இதனால் பி.டி.ஆரின் மனைவி ருக்மணியையே வேட்பாளராக்க திமுக முடிவுசெய்துள்ளது. இதற்கு ருக்மணியும் சரி சொல்லிவிட்டதாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X