For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலை தடை ஒரு தீண்டாமைக் கொடுமை: கனிமொழி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழையக் கூடாது என்று கூறுவது ஒருதீண்டாமைக் கொடுமைதான் என்று கவிஞர் கனிமொழி கூறியுள்ளார்.

கருத்துச் சுதந்திரத்தை வலுப்படுத்தும் முகமாக கருத்து என்ற பெயரில் மத்தியநிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துடன் இணைந்து ஒருஅமைப்பை நடத்தி வருகிறார் கனிமொழி.

பல்வேறு நாட்டு நடப்புகள் குறித்து கருத்து அமைப்பு அவ்வப்போது தனதுகருத்துக்களை வெளியிட்டு வருகிறது. பிறருடைய கருத்துக்களையும் சுதந்திரமாகவெளிப்படுத்த நல்ல பிளாட்பாரமாகவும் அமைந்துள்ளது.

சபரிமலை கோவிலில் நடிகை ஜெயமாலா நுழைந்தது குறித்த சர்ச்சை தொடர்பாககனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். அதில், கண்டதேவி கோவில்தேரோட்டத்தின்போது தலித் சமூக மக்கள் வடம் பிடித்து இழுக்க அனுமதிமறுக்கப்பட்டதை எதிர்த்து பலவித போராட்டங்கள் நடந்தன.

நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் பெண்களை கோவில்கருவறைக்குள் நுழைய அனுமதி மறுப்பதை எதிர்த்து யாரும் குரல் கொடுக்கவில்லை.எதிர்ப்பு தெரிவிக்க தயக்கம் காட்டுகின்றனர்.

தலித்துகள் வடம் பிடிக்கக் கூடாது, கோவில்களுக்குள் நுழையக் கூடாது என்பதுதீண்டாமைக் கொடுமை என்றால் கோவில்களுக்குள் பெண்கள் நுழையக் கூடாதுஎன்பதும் ஒருவகையில் தீண்டாமைக் கொடுமைதான்.

பாரம்பரியப் பழக்கம், பன்னெடுங்காலமாக கடைப்பிடிக்கப்படும் வழக்கம் என்றுகூறுவது ஒரு ஏமாற்று வேலை. நமது நாட்டை பாரதத் தாய் என்றுதானே கூறுகிறோம்?அப்படி இருக்கையில், பெண்களை முற்றிலும் ஒதுக்கி விட்டு ஒரு பாரம்பரியம்நமக்குத் தேவையா?

விட்டால், நாடாளுமன்றத்திலும், சட்டசபையிலும் பெண்கள் நுழையக் கூடாது என்றுசொன்னாலும் சொல்வார்கள். கண்ணகியை விமர்சிப்போரும் உண்டு. ஆனால்இலக்கியத்தில் ஒரு அடையாளமாக விளங்குகிறாள் கண்ணகி.

ஆனால், இன்றைய பெண்களுக்கு அவள் ஒரு நல்ல முன்னுதாரணம் என்று கூறமுடியாதுதான். தவறு செய்த கணவனைத் தட்டிக் கேட்கும் தைரியம் இல்லாத பெண்கண்ணகி என்பதை யாரும் மறுக்க முடியாது.

அதேசமயம், கண்ணகி சிலை என்பது வளமையான தமிழ் பாரம்பரியத்தின்அடையாளச் சின்னம். அவள் வாழ்ந்த கால கட்டத்தில் அவளது நடவடிக்கைகள்முன்னுதாரணமாக இருந்துள்ளன. சாதாரணப் பெண் ஒருத்தி, அகதியாக இன்னொருஊருக்குப் போய் அநீதியை தட்டிக் கேட்கும் துணிவுள்ளவளாக மாறிய கதையைகண்ணகி சிலை நமக்கு எடுத்துக் கூறுகிறது.

கணவன் விஷயத்தில் தைரியம் இல்லாதவளாக அவள் இருந்தபோதிலும், அநீதியைத்தட்டிக் கேட்கும் துணிவு பெற்றவளாக கண்ணகி இருந்துள்ளாள் என்பதை மறுக்கமுடியாது என்று கூறியுள்ளார் கனிமொழி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X